You are here
Home > Posts tagged "புதிய கல்விக் கொள்கை"

விழுது : இருமாத கல்வி இதழ்

விழுது-7 நவ.-டிச.2016.pdf விழுது-6 செப்.-அக்..2016.pdf விழுது -5 ஜூலை-ஆக.2016.pdf புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழ் விழுது-4 மே-ஜூன் 2016.pdf  விழுது -3 மார்ச்-ஏப்.2016.pdf  விழுது-2 ஜன.பிப்.2016.pdf விழுது-1 நவ-டிச.2015.pdf வங்கிக்கணக்கு மூலம் நேரடியாகச் சந்தா செலுத்த : Vizhuthu, A/c No. 6412740321 , Indian bank, Royapettah Branch IFSC: IDIB000R021  ஆண்டுச் சந்தா ரூ.100/- மட்டுமே... மேலும் விபரங்களுக்கு: 9944052435, 9047140584

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் தொடர் இயக்கம் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு

திருச்சிராப்பள்ளி. செப்,4- மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தொடர் இயக்கம் நடத்த கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் என்.மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிதிக்காப்பாளர் மோசஸ் பேசுகையில், 1997க்கு முன் ஒருவகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருந்தார். அதன் பின் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்துக்கு வழிவகுக்கும்!

மீண்டும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கையில் பள்ளிக்கூடங்கள் வருவதெல்லாம் இனி நடக்கும் கதையா? அரசியல்வாதிகள் மனசு வெச்சா எல்லாம் நடக்கும். ஆனா, இதுக்குப் பின்னாடி சுத்துற பணம் அவங்களை மாற விடும்கிற நம்பிக்கையை என்கிட்டேயே பறிச்சுடுச்சு. ஒரு ஆசிரியர் நியமனத்துக்குப் பின்னாடி பத்து லட்சம் புரளுதுங்கிறாங்க. பணி மாறுதலுக்குப் பின்னாடி ரெண்டு லட்சம் புரளுதுங்கிறாங்க. பிறகெப்படி உள்ளாட்சி நிர்வாகம் கையில பள்ளிக்கூடங்களை ஒப்படைக்க மனசு வரும்? பண்டைய இந்தியாவின் இணைப்பு மொழி என்பதோடு

சமூகப் பிளவுக்குக் காரணமாகக் கல்விக் கொள்கை இருக்கக் கூடாது

எஸ்.எஸ்.இராஜகோபாலன் பேட்டி சென்னை, சாலிகிராமத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்த வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளியிருக்கிறது அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் வீடு. “பாலு மகேந்திரா உயிரோடு இருந்த வரைக்கும் வாரத்தில் ஒரு முறையாவது சந்திச்சுருவோம். நல்ல பேச்சுத் துணைகள்ல ஒருத்தரை இழந்துட்டேன்” என்கிறார். வீடு பரம சுத்தமாக இருக்கிறது. மிக மிக அத்தியாவசியப் பொருட்களைத் தவிர ஏதும் இல்லை. “பொருட்களைச் சேர்க்குறது எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கிறது இல்லை. இந்த ரெண்டு நாற்காலியும்

புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா?

எல்லோரும், ‘அந்த அறிக்கைக்குள் பூதம் இருக்கிறது’ என்றரீதியில் மிரட்டியதால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில்தான், ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ வரைவு தொடர்பான ஆங்கில ஆவணத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் (தமிழாக்கம்: பி.இரத்தினசபாபதி) படித்தேன். ரொம்ப மொக்கையான விமர்சனங்களைப் படித்துவிட்டு, மொக்கைப் படத்தைப் பார்த்தால்கூட நல்ல படமாகத் தோன்றுமே அப்படியிருந்தது என் அனுபவம். எனக்கு நல்ல, கெட்ட விஷயங்கள் இரண்டுமே கண்களில் பட்டன. கெட்ட விஷயங்களை எல்லாம்

இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்

இந்திய அரசு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் ‘வரைவு தேசிய கல்விக்கொள்கை - சில உள்ளீடுகள்’ என்றொரு அறிக்கையினை வெளியிட்டு, (தமிழில் 99பக்கம்) இதுபற்றிய மக்கள் கருத்தைக் கேட்டுள்ளது. http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf இதைப்படித்து முடித்ததும், நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில், இதைப்படித்து முடித்ததும், நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில், ‘கத்தரிக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு கைலாசம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு வாழைக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு வைகுந்தம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு’ - என்று துக்க வீடுகளில் பறை

என்ன எதிர்பார்க்கிறது இந்தியா?

புதிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கை, தாய்மொழி வழிக் கல்வி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகச் சரியாகவே இனம் கண்டிருக்கிறது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி என்று வரம்பு விதிக்கிறது. உயர் கல்வியும் தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் இருந்தாக வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தில், மக்களின் மொழிகளில் உயர் கல்வி குறித்து இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது

எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை? வே.வசந்தி தேவி

இன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது? உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு; வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச் செல்லும் திறமை பெறுகின்றனர். பெரும்பான்மையோர் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு,

கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை

தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில் அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் அமெரிக்கக் கல்வியாளர் ஜான் திவே. நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் துருக்கி நாட்டின்

என்னவாகும் உயர்கல்வியின் எதிர்காலம்?

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான

Top