You are here
Home > இயக்கச் செய்திகள் (Page 2)

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு வழிகாட்டி பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர் செயிண்ட் ஜான் பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 2019-ம் ஆண்டிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற் கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடை பெற்றது.  பயிற்சியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலிருந்து 170 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்வியியல் கல்லூரியின் நிர்வாகி அருட்தந்தை டாக்டர் ஏ.ஸ்டீபன் ராஜ் தலைமை வகித் தார். மாவட்ட

புரிந்து படித்தால் நீங்களும் விஞ்ஞானியே!’ அறிவியல் கண்காட்சியில் தெளிவான விளக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அறிவியல் கண்காட்சி மற்றும் விஞ்ஞானிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 20வது மாநிலமாநாட்டை முன்னிட்டு, 'விஞ்ஞானிகளுடன் சந்திப்பு' நிகழ்ச்சியை பள்ளி மாணவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.வி.பி., கல்வி நிறுவன தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.மத்திய அறிவியல் கருவிகள் மையத்தின் மூத்த விஞ்ஞானி ஐயப்பன் பேசுகையில், ''எதையும் கஷ்டப்பட்டு செய்ய கூடாது. இஷ்டப்பட்டு செய்யும் போதுதான் சாதிக்க

மோட்டர் வாகனங்களில் 350சி.சி., 150சி.சி., 100சி.சி எனக் குறிப்பிடுவதன் காரணம் என்ன?

மோட்டர் வாகனங்களில் உள்ள என்ஜின்களில் பெட்ரோல் அல்லது டீசல் ஆக்ஸிஜன் உதவி கொண்டு எரிக்கப்பெற்று ஆற்றல் உற்பத்தியாகி வாகனம் இயங்க உதவுகிறது. மோட்டார் வாகன என்ஜின்களில் உள்ள சிலிண்டர்கள் குறிப்பிட்ட வேகத்தில் மாறி மாறி இயங்கும். அப்போது ஒவ்வொரு இயக்கத்தின் போதும் உறிஞ்சப்படும் அல்லது வெளியேற்றப்படும் வளிமங்களின் கொள்ளாலவை கனசென்டி மீட்டரில் (Cubic Centimeters) சுருக்கமாக சி.சி. என்ற அலகால் குறிப்பது எந்திரப் பொறியியலின் மரபு ஆகும்.  அதிக அல்லது

விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?

விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை அறிய ’கைரோ காம்பஸ்’ (கைரோஸ் கோப்) என்ற கருவி விமானி அறையில் கணிப்பொறியுடன் இணந்து உள்ளது. வேகமாக சுழலுகின்ற ஒரு சக்கரத்தின் அச்சு திசை மாறாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் அக்கருவி செயல்படுகிறது. அத்துடன் விமான நிலையத்திலிருந்து அனுப்பப்படுகிற ரேடியோ சிக்னல்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும். மேலும் உயரத்தை அறிவிக்கும் திசைகாட்டி எனும் தொலைகாட்சியும் உதவும்.

திருப்பூர்: வல்லுநர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (31-7-19) நடத்தப்பட்டது திரு.காத்தவராயன், அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் அவர்களின் எளிய அறிவியல் பரிசோதனைகள் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவன்மலை மற்றும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதுபாளையம் பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒலி உருவாதல், விசை, உராய்வு, பரப்பு இழுவிசை, மைய விலக்கு

ஈரோட்டில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

இன்று (ஜூலை,29) ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான NCSC வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமானது ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

செங்கை  புத்தகத் திருவிழா பணியாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுவிழா…

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,  செங்கை பாரதியார் மன்றம் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாகச் செங்கை புத்தகத் திருவிழா என்ற பெயரில் புத்தக விற்பனை இயக்கத்தை நடத்தி வருகின்றனர். கடந்த  டிசம்பர் மாதம் நடைபெற்ற மூன்றாவது புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் பிரபல பதிப்பகங்கள் கலந்துகொண்டு புத்தகங்களைக் காட்சிப்படுத்தினர். மேலும் புத்தக விற்பனை நடைபெற்ற நாட்களில் மாலை நேரங்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளின் கருத்தரங்கங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த

காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

காஞ்சி மாவட்ட முதலாவது செயற்குழு ஜூலை, 28 அன்று செங்கற்பட்டில் மாவட்டத்தலைவர் முனைவர் என். மாதவன் அவர்கள் தலைமயில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற வேலைகள். வேலைப்பகிர்வு, மாவட்ட உபக்குழு பொறுப்பாளர்கள், மாநில மாநாட்டு பங்கேற்பாளர்கள் ஆகியவைப் பற்றி பேசப்பட்டது.

திருப்பூரில் TNSF மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. இன்று (27-7-19) ஆர்.கே.ஆர் கிரீக்ஸ் மெட்ரிக் பள்ளியில் திண்டுக்கலில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இ.செயலாளர், ஆசிரியர் மற்றும் வானியலாளர் திரு.சுப்பு உலகநாத பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். வித்யாமந்தீர் மெட்ரிக் பள்ளியில் இன்று காலை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினரும்

Top