You are here
Home > இயக்கச் செய்திகள்

சூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா?

இந்திய நேரப்படி இன்று இரவு  10.18 சூரிய கிரகணம் தொடங்குகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில மாகாணங்களில் சூரிய கிரகணத்தின் முழுத் தாக்கத்தையும்  உணரவும், பார்க்கவும் முடியும். ஆயினும் அந்த இயற்கை நிகழ்வின் தாக்கம் புவியெங்கும் இருக்கும் என்பதால், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. கிரகணங்கள் பற்றி பல்வேறு கற்பிதங்கள் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது;  வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான

அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்

ராமநாதபுரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வாணியில் உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் இ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.சி.எஸ்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சொக்கநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பரிமளா டி ஆண்டனி துவக்கி வைத்தார். பல்வேறு தலைப்புகளில் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், இணைச்செயலாளர் எஸ்.கணேசன்,

அறிவியல் இயக்க மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு, செங்கல்பட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் வீரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மாதவன், மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட கவுரவ தலைவர் ஜனார்த்தனன், லிட்டில் ஜாக்கி மெட்ரிக் பள்ளி நிறுவனர் சாம்டேனி, செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்ற தலைவர் ராஜி, சமூக ஆர்வலர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட

அறிவியல் இயக்க வினாடி வினா:

கூடலுார் : அறிவியல் இயக்கப் போட்டியில் கூடலுார், பந்தலுார் பள்ளிகள் மாவட்ட போட்டிக்கு முன்னேறின.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவில் நடக்கவுள்ள ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டிகளை முன்னிட்டு, கூடலுார் வட்ட அளவிலான போட்டிகள், கூடலுாரில் நடத்தப்பட்டன.கூடலுார் ஐடியல் மெட்ரிக்., பள்ளி, ஜிடிஎம்ஓ., பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தாமஸ், புனித செபாஸ்டியன், புனித அந்தோணியார் பள்ளிகள், அத்திப்பள்ளி, வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்,

நீட் போன்ற போட்டித்தேர்வுக்காக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவது நியாயமற்றது: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேச்சு

தமிழக அரசு நீட் போன்ற போட்டித்தேர்வுகளுக்காக ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது நியாயமற்றது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார். சேலம் நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்டத்தின் சார்பில் 13வது மாவட்ட மாநாடு நடந்தது.  மாநாட்டிற்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் ஏற்காடு இளங்கோ தலைமையேற்றார். சேலம் நகர கிளைசெயலாளர்

அறிவியல் இயக்கம் சார்பில் உலக புத்தக தினவிழா

தாரமங்கலம்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தாரமங்கலத்தில், புத்தகம் வாசிப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை சார்பில், புத்தகம் வாசிப்பு சிறப்பு முகாம் சீனிவாசன் தலைமையில், தாரமங்கலம், நைஸ் கிட்ஸ் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து செங்கோட்டுவேல் பேசினார். ஆசிரியர் செந்தில்குமார் ஆயிஷா புத்தகத்தையும், ஆசிரியர் வள்ளிமுத்து, வகுப்பறையின் கடைசி நாற்காலி

தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை.ஏப்,20. நீட் தேர்வுக்கு -தமிழ்நாட்டில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக் கங்களில் 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்கி

அறிவியல் இயக்க மாநாடு

உடுமலை : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உடுமலை கிளை மாநாடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறிவியல் இயக்கத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி 'அறிவியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் பேசினார்.நடப்பாண்டு இறுதிக்குள், 500 உறுப்பினர்களை சேர்ப்பது, அறிவியல் கருத்தரங்கங்கள் நடத்தி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளம்தலைமுறைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடப்பாண்டு முதல்,

வாசிப்பைக் கொண்டாடும் ஆயிரம் புத்தகக் காட்சிகள்!

உலகப் புத்தக தினம் ஏப்ரல் - 23 தமிழகத்தின் புத்தகக் காதலர்களுக்குப் புத்தகக் காட்சியைவிடப் பெருமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் வேறு ஏதும் இருக்க முடியாது. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் அலைமோதும் கூட்டமே இதற்குச் சான்று. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புத்தகக் காட்சிகளுக்கே இப்படியென்றால் ஒரே சமயத்தில் ஆயிரம் புத்தகக் காட்சி நடைபெற்றால் எப்படி இருக்கும்! ஆம், ஏப்ரல் 23-ம்

கிருஷ்ணா கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் அறிவியல் கருத்தரங்கம்

ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்; அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் டவுன் எல்லை திருத்தணி தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விண்வெளியில் நமது முகவரி, தொலை நோக்கி மூலம் வான் நோக்கு நிகழ்வு என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மாநில கருத்தாய்வாளர் வேலூர் விசுவநாதன் செயல் மற்றும் திரைப்பட காட்சிகளுடன் விளக்கம் அளித்தார். முன்னதாக

Top