You are here
Home > Thulir Illam

“ரைட் சகோதரர்கள் துளிர் இல்லம்”

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம்.மாம்பாக்கம் ஊராட்சி கிராமத்தில் இன்று (12.10.2020) "ரைட் சகோதரர்கள் துளிர் இல்லம்" துவங்கப்பட்டது.தலைவர்.இ. திருவாசகம்.துணைத் தலைவர்.எஸ். பார்த்திவ்.செயலாளர்.சி. சாருலதா.இணைச் செயலாளர்.ஓவியா.பொருளாளர்.சி. துளசி.

துளிர் இல்லம் தொடக்க விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நெய்வேலி கிளை சார்பில் துளிர் இல்லம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. வட்டம் 17-ல் உள்ள ஜவகர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் நூர்நிஷா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார். என்.எல்.சி. பள்ளிகளின் செயலர் ஐ.நெடுமாறன் துளிர் இல்லம் மாணவர்களை அறிமுகப்படுத்தி, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்துப் பேசினார். மாநில கருத்தாளர் எஸ்.பாலகுருநாதன் கருத்துரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்த்

விவசாய கணக்கெடுப்பு

சாயல்குடி: கூராங்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், இயற்கை வளம் குறித்த ஆய்வுப்பணி நடந்தது. இதில் பண்ணைக்குட்டைகளை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்துதல், தர்மமுனீஸ்வரர் கோயிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் விதமாக பூச்செடிகள் அமைத்தல், மலட்டாறு பாலத்தில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. களப்பணியாளர் திருமணி செல்வம், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா ஈடுபட்டனர். . நன்றி: தினமலர் நாளிதழ்

அய்யலூரில் எடிசன் துளிர் இல்லம் துவக்கம்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அய்யலூர் கிளையின் சார்பில் இன்று தாமஸ் ஆல்வா எடிசன் துளிர் இல்லம் துவங்கப்பட்டது.. மாவட்ட இணைச் செயலாளர் ராசு, மணிகண்டன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.

துளிர் இல்ல மண்டலப் பயிற்சிகள்-ஜன.23,24

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.. நம்முடைய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மிக முக்கியமான பணிகளுள் ஒன்றான துளிர் இல்லங்களுக்கான செயல்பாடுகளை மாநிலம் முழுவதும் கொண்டுசெல்லும் விதமாக வருகின்ற ஜன.23,24 தேதிகளில் மூன்று மண்டலங்களில் ஒருநாள் பயிற்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.. விரிவான கடிதம் இணைப்பில்.. துளிர் இல்ல மண்டலப் பயிற்சிகள்-2016 PDF

Top