You are here
Home > மாநில நிகழ்வுகள் (Page 2)

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள்-2019.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த ஆண்டுக்கான போட்டிகளுக்கு தலைப்புகள் பின்வருமாறு.. 5-8 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வும் நானும்.. என்ற தலைப்பிலும் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் வகுப்பறை.. என்ற தலைப்பிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது.. என்ற தலைப்பிலும் ஆர்வலர்களுக்கு அரசுப்பள்ளிகள் இணைப்பும் அடைப்பும்

தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான மண்டல பயிற்சி முகாம் நடந்தது. இந்திய அறிவியல் தொழில்நுட்ப குழுவினரால், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடக்கிறது. இதில், 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான மண்டலப் பயிற்சி முகாம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாநாட்டுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் காத்தவராயன்

போலி அறிவியலைப் பரப்புவது சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது

திருப்பூர், ஆக.10- சமூகத்தில் போலி அறிவியலைப் பரப்புவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிராக அறி வியல் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் அறி வியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் விஞ்ஞானி த.வி.வெங்க டேஸ்வரன் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் 20ஆவது மாநில மாநாடு மாற்றத்துக்கான அறிவியல் என்ற கொள்கை முழக்கத்துடன் திருப்பூர் அம்மன் கலையரங்கில் வெள்ளி யன்று தொடங்கியது. இம்மாநாட் டிற்கு

திருப்பூர்: அறிவியல் இயக்க மாநில மாநாட்டு வாழ்த்துரைகள்

அறிவியல் இயக்கப் பொதுச்செயலாளர் அமலராஜன் வாழ்த்து எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி வாழ்த்துரை ஆந்திர மாநில அறிவியல் இயக்கச் செயலாளர் வாழ்த்து திருப்பூர் துளிர் இல்லக் குழந்தையின் வாழ்த்து முனைவர் இராமானுஜம் வாழ்த்து கேரள அறிவியல் இயக்கப் பொதுச்செயலாளர் வாழ்த்து பேரா.திருநாவுக்கரசு, மாநிலக் கருத்தாளர் வாழ்த்து திரு.ஜெயமுருகன், மாநிலக் கருத்தாளர் வாழ்த்து பாரத் ஞான் விஞ்ஞான் சமிதியின் சார்பில் வாழ்த்து மாநில மாநாட்டு பிரச்சார வீடியோ

திருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் 21 ஜூலை 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ. மோகனா அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருமிகு செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கருத்துரையாற்றிய இந்திய கணிதவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவ‌ர் இராமனுஜம் அவர்கள் சமூக பிரச்சினைகளும் அறிவியல்

தஞ்சையில் வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு

20/7/2019 அன்று அறிவியல் இயக்க வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு தஞ்சாவூரில் நடை பெற்றது. அகில இந்திய அறிவியல் இயக்கங்களின் கூட்டமைபின் பொதுச்செயலாளர் பேரா,பொ.இராஜமாணிக்கம் மாநாட்டினை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இயற்கை வள மேம்பாட்டில் தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்& விளைவுகள் குறித்து கருத்தாளர்கள் திருவாளர்கள் P.K.இராஜன், V.சேதுராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இரண்டாண்டு வளர்ச்சி உப குழுவின் சார்பில் நடைபெற்ற பணியறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஸ்டிபன் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து அறிக்கை மீதான கருத்துகளையும்,எதிர்கால பணிகளையும்14 நபர்கள்

திருப்பூரில் அறிவியல் இயக்க மாநில மாநாட்டை முன்னிட்டு கலை கலாச்சார திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமுஎகச பெருமாநல்லூர் கிளை- திருப்பூர் மாவட்டம் இணைந்து அறிவியல் இயக்க 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு "கலை & கலாச்சார திருவிழா" பெருமாநல்லூர் அம்மன் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை,20) நடத்தப்பட்டது

Top