You are here
Home > அறிவியல் வெளியீடுகள்

மன்னார்குடியில் புத்தகத் திருவிழா துவங்கியது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் புத்த திருவிழா வெள்ளியன்று துவங்கியது. திருவிழா நடைபெறும் மன்னார்குடி வடக்கு வீதி ஏ.கே.எஸ் மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கை மன்னார்குடி கோட்டாட்சியர் த.புண்ணிய கோட்டி திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி அமைப்பின் தலைவர் க.ரமேஷ் தலைமை ஏற்றார். நூலக தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் மற்றும் மாட்டுவண்டி மூலம் ஊர் ஊராக புத்தகங்களை எடுத்துச் சென்று கிராம

செங்கை  புத்தகத் திருவிழா பணியாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுவிழா…

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,  செங்கை பாரதியார் மன்றம் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாகச் செங்கை புத்தகத் திருவிழா என்ற பெயரில் புத்தக விற்பனை இயக்கத்தை நடத்தி வருகின்றனர். கடந்த  டிசம்பர் மாதம் நடைபெற்ற மூன்றாவது புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் பிரபல பதிப்பகங்கள் கலந்துகொண்டு புத்தகங்களைக் காட்சிப்படுத்தினர். மேலும் புத்தக விற்பனை நடைபெற்ற நாட்களில் மாலை நேரங்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளின் கருத்தரங்கங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த

வெறும் கல்வி உதவாது, அதை ஞானமாக்க வேண்டும்: கரூர் புத்தகக் கண்காட்சியில் நெல்லை கண்ணன் உரை

கரூரில் பள்ளி கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை சிறப்பு விருந்திராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: ஐயப்ப சாமிக்கு மாலை போடுவது வெறும் பக்தியாகவே இருக்க வேண்டும், வேஷமாக இருக்கக் கூடாது. மாலையை கழற்றிய உடனே மது அருந்தச் சென்றுவிடக்கூடாது. பலப்பல தெய்வங்கள் என மக்களைப் பிரிக்காதீர்கள், தெய்வம் ஒன்றே என்றார் பாரதி. இறைவனுக்கு உருவமே கிடையாது. ஒரு

வாசிப்பைக் கொண்டாடும் ஆயிரம் புத்தகக் காட்சிகள்!

உலகப் புத்தக தினம் ஏப்ரல் - 23 தமிழகத்தின் புத்தகக் காதலர்களுக்குப் புத்தகக் காட்சியைவிடப் பெருமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் வேறு ஏதும் இருக்க முடியாது. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் அலைமோதும் கூட்டமே இதற்குச் சான்று. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புத்தகக் காட்சிகளுக்கே இப்படியென்றால் ஒரே சமயத்தில் ஆயிரம் புத்தகக் காட்சி நடைபெற்றால் எப்படி இருக்கும்! ஆம், ஏப்ரல் 23-ம்

‘புதுமைகளை உருவாக்குபவர்களே எழுத்தாளர்கள்’

பழைமைகளை வெளிக்கொணர்வதும், புதுமைகளை உருவாக்குவதும் எழுத்தாளர்கள் தான் என திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ண குமார் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் சார்பில் 12 நாள் புத்தகத் திருவிழா செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள கிருஷ்ண மகாலில் நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்பாக்கம் அறிவியல் இயக்க நிர்வாகி ச.வெங்கடேசன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், தமிழ்நாடு தொடக்கக்

புத்தக வாசிப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது: நடிகர் நாசர்

எத்தனை நவீனங்கள் உருவானாலும் புத்தக வாசிப்பானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், செங்கை பாரதியார் மன்றமும் இணைந்து நடத்தும் 12 நாள் புத்தகக் கண்காட்சி செங்கல்பட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. புத்தகத் திருவிழாவின் ஆலோசகர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் ஜி.ஜோஸ்வா சாம் டானி வரவேற்றார். செயலாளர் ஆ.வீரன் அறிமுக உரையாற்றினார். செங்கல்பட்டு சார்-ஆட்சியாளர் வீ.ப.ஜெயசீலன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப்

செங்கல்பட்டில் துவங்கியது புத்தக திருவிழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், புத்தக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் சார்பில், செங்கைப் புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஆரம்பித்த புத்தக விழாவை, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நடிகர்தலைவாசல் விஜய் ஆகியோர் பங்கேற்று பேசினர்.தலைவர் ஜோஸ்வா

காரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் “மந்திரமா தந்திரமா”!

காரைக்குடி: துளிர் அறிவியல் இதழின் வாசகர் விழா. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவர் மேனிலைப் பள்ளியில் துளிர்.அறிவியல் இதழின் 30ம் ஆண்டு வாசகர் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு ஆசிரியர் செந்தில்குமார்.வரவேற்புரையாற்றினார்.அறிவியல் விழிப்புணர்வு பாடல்களை கவிஞர் மிழ்கண்ணன் பாடினார். சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையுரையாற்றினார். எஸ்எம்எஸ்வி பள்ளித் தலைமையாசிரியர் முரு.வள்ளியப்பன்.உதவித் தலைமையாசிரியர் .ஹன்ரிபாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.. துளிர் பொறுப்பு ஆசிரியர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முத்துசாமி.அறிவியல்

தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான செய்தி மடல்: விஞ்ஞானச் சிறகு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான செய்தி மடல்.. விஞ்ஞானச் சிறகு...... வாசகர்களின் விருப்பத்திற்கே இப்போது மின் இதழ் வடிவில்.. வாசியுங்கள்.. கருத்துகள், விமர்சனங்களை editorsiragu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.. 312

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழாவின் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் கோ-ஆபரேடிவ் காலனி, ஈஎம்எஸ் திருமண அரங்கில் நடைபெற்ற துவக்க விழாவுக்கு புத்தகத் திருவிழா வரவேற்புக்  குழுத் தலைவர் என்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் நவரத்தன்மல், நகர்மன்ற துணைத் தலைவர் ரமாசெல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் ராஜாமணி

Top