You are here
Home > அறிவியல் கல்வி (Page 2)

“இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே மனிதரை மேம்படுத்தும்’

புதுக்கோட்டை: இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே மனிதரை மேம்படுத்தும் என்றார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய பசுமைப்படை, துளிர் இல்லங்கள் இணைந்து திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திங்கள்கிழமை நடத்திய மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியது: 2016-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் சட்டவிரோத வனவிலங்கு விற்பனையை தடுத்தல் என்பதாகும். மக்களின் நாகரிக வாழ்க்கையாலும், பேராசையாலும் பறவைகள்,

மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் அனைத்துக் குழந்தைகளும் அமராவதி அணையில் இருந்து முதலைப் பண்ணை வரை இயற்கை அறிவியல் நடைப் பயணம் மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு வகையான தாவரங்கள், பூச்சி வகைகளின் மாதிரிகளைச் சேகரித்தனர்.

குழந்தைகள் அறிவியல் திருவிழா தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான இரண்டு நாள் குழந்தைகள் அறிவியல் திருவிழா உடுமலையில் சனிக்கிழமை தொடங்கியது. உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் துவங்கிய இந்த விழாவுக்கு ஒன்றியச் செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். வரவேற்புக் குழு செயலாளர் எஸ்.செல்லத்துரை வரவேற்றார். திருப்பூர் மாவட் ட துளிர் இல்ல நிர்வாகி செல்வன் எஸ்.ஹரிஹரன் தலைமையில் நிகழ்ச்சிகள் துவங்கி யது.ஸ்ரீ ஆதர்ஷ் பள்ளிச் செயலர்

கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா

உடுமலை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவிலான 'கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா' 28ம்தேதி உடுமலையில் நடக்கிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கோடைக்கால அறிவியல் விழா நடத்த உடுமலையில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, மாநில அளவிலான கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா, மே 28 மற்றும் 29ம்

விவசாய கணக்கெடுப்பு

சாயல்குடி: கூராங்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், இயற்கை வளம் குறித்த ஆய்வுப்பணி நடந்தது. இதில் பண்ணைக்குட்டைகளை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்துதல், தர்மமுனீஸ்வரர் கோயிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் விதமாக பூச்செடிகள் அமைத்தல், மலட்டாறு பாலத்தில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. களப்பணியாளர் திருமணி செல்வம், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா ஈடுபட்டனர். . நன்றி: தினமலர் நாளிதழ்

உடலியல் கல்வி: பரவலாகும் மூடநம்பிக்கைகளும் பேசப்படாத உண்மைகளும்

ஒரு காலத்தில் பகிரங்கமாகப் பார்ப்பதோ, படிப்பதோ தவறு என்று கருதப்பட்ட நிலை மாறி இன்றைக்கு இணையதளங்கள், பத்திரிகைகள், கேபிள் டிவி, குறுந்தகடுகள், புதினங்கள், கைபேசிகள் என்று பல்வேறு விதமான ஊடகங்களின் மூலம் பாலியல் தகவல்கள் கிடைத்துவருகின்றன. இது குறித்து 40 லட்சத்துக்கும் மேலான இணையதளங்களும், 37 கோடிக்கும் மேலான இணையப் பக்கங்களும் இருக்கின்றன, ஒரு நாளைக்கு 25 லட்சம் மின் அஞ்சல்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிகிறது. உலகில் மொத்தமுள்ள

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனாய்வுத் தேர்வு ( TTT )-2015

கடந்த டிசம்பர், 19.2015 அன்று நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வு நடைபெற்றது.. இதில் துளிர் (27067), ஜந்தர் மந்தர் (5066) ஆக மொத்தமாக 32,172 குழந்தைகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.. இத்தேர்விற்கான மாநில ஒருங்கிணைப்பாளராக நண்பர். எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார்.. கள அளவில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அறிவியல் இயக்கத் தொண்டர்கள், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள்,

தேசிய அறிவியல் நாள்: பிப் 28 – ராமன் கண்ட நீல வானம்

தேசிய அறிவியல் நாள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எதற்காக இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத்

கலிலியோ பிறந்த நாள்: அறிவியல் கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் கிளை வானியல் அறிஞரும் நவீன அறிவியலின் முன்னோடியுமான கலிலியோ  கலீலீயில் பிறந்த தினத்தை (பிப் 15) முன்னிட்டு மாணவர்களிடையே அறிவியல் பார்வை மற்றும் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் வண்ணம் “எளிய அறிவியல் பரிசோதனைகள்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. “அறிவியல் பார்வையும் – அறிவியல் உண்மையும்” என்ற தலைப்பில் திரு. உமாசங்கர் ,மாவட்டப்பொருளாளர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அனுப்பர்பாளையம் புதூர் பள்ளி மாணவர்களுக்கு எளிய செயல்பாடுகள் செய்தும் குறும்படங்கள்

திருப்பூரில் டார்வின் தின நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தொறும் பிப்ரவரி 12 தேதியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாளை மிகச்சிறப்பாக அவரின் கொள்கைகளை மாணவர்களிடை கொண்டு சேர்த்து வருகிறது.             இந்த ஆண்டும் “மனிதன் பரிணமித்த கதை” என்ற தலைப்பில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி –ஈ.பி.காலனி, சாமண்டிபுரம், கே.பி.கே நேஷ்னல் மெட்ரிக் பள்ளி, அமுதா மழலையர் பள்ளி மற்றும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இரங்கநாதபுரம் – சிறுபுலுபட்டி பிரிவு ஆகிய பள்ளிகளில் டார்வின் கோட்பாடுகள் மிக எளிய

Top