You are here
Home > அறிவியல் கல்வி

நீர் நிரப்பிய வாளியில் கையை விட்டு சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்?

நீர் நிரப்பிய வாளியில் கையை விட்டு சுழற்றும்போது, வாளியில் உள்ள நீர் சுழல்கிறது. இவ்வாறு சுழலும் நீருக்கு மைய விலக்கு விசை உண்டு. இது சுற்று வேகத்தின் வர்க்கத்திற்கு நேர்விகித தொடர்பு கொண்டிருக்கும். நீரை வேகமாக சுற்ற இந்த விசையும் கூடுகிறது. மைய விலக்கு விசையால், வாளியின் மையத்திலிருந்து நீர் விலகி விளிம்பு நோக்கி நகரும். இதனால் நீர் மட்டம் மையத்தில் தாழ்ந்தும் விளிம்பில் உயர்ந்தும் காணப்படும். சுழலும் நிரின் மையப்பகுதியில்

காமிரா எவ்வாறு உருவங்களை பதியவைக்கிறது?

காமிரா எனும் படபிடிப்பு கருவியில் குவிலென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். பொருளிலிருந்து சிதறடிக்கப்படும் ஒளிக்கதிர்கள் காமிராவின் லென்ஸை ஊடுருவி பொருளின் தலைகீழான பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. முந்தைய பிலிம் காமிராக்களில் பிம்பங்களை பதிவு செய்ய படச்சுருள் வைக்கப்பட்டிருக்கும். இன்றைய டிஜிடல் காமிராக்களில் படச்சுருளுக்கு பதிலாக லட்சக்கணக்கான புள்ளிகளைக் (pixels) கொண்ட ஒளியுணர் சிப் வைக்கப்பட்டிருக்கும். காமிரா லென்ஸிலிருந்து பொருள் இருக்கும் தொலைவிற்கேற்ப பிம்பம் விழும் இடமும் மாறுபடும். படச்சுருள் அல்லது ஒளியுணர் சிப்பின் மீது பிம்பத்தை

யுரேகா யுரேகா 06: நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது, பேருந்துகளின் டயர் சூடாவது ஏன்?

பேருந்து செல்லும்போது அதன் டயர் தரையில் உருளுகிறது. இவ்வாறு உருளும்போது தரைக்கும் டயருக்கும் இடையே உராய்வு ஏற்படுகிறது. இந்த உராய்வு ஆற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு டயரை சூடாக்குகிறது.

யுரேகா யுரேகா 05: காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

நம் சூரியக் குடும்பம் உள்ள ஆகாய கங்கை பால் வெளி மணிடலம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலத்தை காஸ்மிக் ஆண்டு, காலக்டிக் ஆண்டு (Galactiv year) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். அது 2x108  (20 கோடி) பூமி ஆண்டுகளுக்குச் சமம் எனலாம்.

யுரேகா யுரேகா 04: எக்ஸ்ரேக்கும் ஸ்கேனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எக்ஸ்ரே, ஸ்கேன் இரண்டுமே மருத்துவத் துறையில் சாதனை புரிந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளாக்கும். ராண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ்ரே நம் உடலில் உள்ள எலும்புகளின் நிலை பற்றியும், நுறையீரல், இதயம், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம், கருவில் வளரும் சிசுவின் நிலை போன்றவற்றின் மேலோட்டமான நிலை பற்றியும், முன்பின் அல்லது பக்கவாட்டு பிம்பமாகவோ படம் பிடித்துக்காட்டும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் எக்ஸ்ரேயினால் புலனறிய முடியவில்லை. ஆனால் ’ஹௌன்ஸ்பீல்ட்’ கண்டுபிடித்த சி.டி.ஸ்கேனர் உடலில்

யுரேகா யுரேகா 03: முகம் பார்க்கும் கண்ணாடியில் பூசப்படும் ரசம் எக்கலவையினால் ஆனது?

பண்டைய காலத்தில் ஆடிகள் தயாரிக்கப்பட்டபோது பாதரசத்தைக் கண்ணாடி மேல் படியச்செய்யும் தொழில்நுட்பம் இருந்தது. அதிலிருந்துதான் ’ரசம் பூசுதல்’ என்ற பெயர் தோன்றியது. இக்காலத்தில் வெள்ளி நைட்ரேட்டை சில வேதிப்பொருட்களின் உதவியால் (பார்மால்டிஹைடு, சோடியம் பொட்டாசியம் டார்ட்ரேட்) ஒடுக்கம் செய்தால் வெள்ளி பிரிந்து கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளும். அது உதிராமல் இருக்க அதன் மீது சிவப்பு நிற காரீய ஆக்ஸைடைப் பூசி விடுகின்றனர். இதைத்தவிர அலுமினியம், வெள்ளீயம் போன்றவற்றை ஆவியாக்கி படிய வைத்தும்

யுரேகா யுரேகா 02: குளத்தில் விட்டெறியும் கல் வட்ட அலைகளை ஏற்படுத்துவதேன்?

சலனமில்லாமல் நீர்ப்பரப்பின் மீது கல்லை விட்டெறியும்போது, கல் விழுந்த இடத்தில் நீர் இடம் பெயர்ந்து குழிவு ஏற்படுகிறது. குழியும் நீர்ப்பரப்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது வேகம் காரணமாக மேற்பரப்பும் குவிகிறது. இந்த நீர்ப்பரப்பும் நிலையானது அல்ல. அது மீண்டும் கிடைமட்டத்திற்கு வந்து வேகம் காரணமாக இரண்டாவது முறை குழிகிறது. இப்போக்கு பல முறை தொடர்கிறது. இதனால் கல் விழுந்த இடத்தில் தொடர்ந்து நீர்ப்பரப்பு மேலும் கீழும் அலைகிறது. இந்த

யுரேகா யுரேகா 01: விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள்?

விண்வெளியில் புவியீர்ப்பு விசை மிகவும் குறைவு. பூமியின் மையத்திற்கும் விண்வெளியில் இருக்கும் வீரருக்கும் இடைப்பட்ட தொலைவின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்தில் புவியீர்ப்பு விசை இருக்கும். பூமியின் ஆரத்தைப்போல 32 மடங்கு தொலைவில் இருக்கும் வீரருக்கு புவியீர்ப்பு விசை ஆயிரத்தில் ஒரு பங்காக இருக்கும். இதனால், விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியேறினால் கீழே விழமாட்டார். மாறாக மிதந்து கொண்டிருப்பார். மேலும் அவர் ராக்கெட் தத்துவ அடிப்படையில் அதனோடு கூடவே நகர முடியும். விண்கலத்தை

நாமக்கல்லில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் வழிக்காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை 23.07.2019 அன்று நாமக்கல் தெற்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திருமிகு. ரகோத்தமன் மாவட்ட பொருளாளர் வரவேற்புரை நல்கினார். திருமிகு. சகா கண்ணன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய குழந்தைகள்

திருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் 21 ஜூலை 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ. மோகனா அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருமிகு செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கருத்துரையாற்றிய இந்திய கணிதவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவ‌ர் இராமனுஜம் அவர்கள் சமூக பிரச்சினைகளும் அறிவியல்

Top