You are here
Home > அறிவிப்புகள் (Page 2)

கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா

உடுமலை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவிலான 'கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா' 28ம்தேதி உடுமலையில் நடக்கிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கோடைக்கால அறிவியல் விழா நடத்த உடுமலையில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, மாநில அளவிலான கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா, மே 28 மற்றும் 29ம்

புதன்கோள் சூரியனின் விட்டம் கடக்கும் நிகழ்வு: 45 ஆண்டுகளுக்குப்பின் நாளை வானில் நடக்கிறது

சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு திங்கள்கிழமை  (மே- 9) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தெரிவித்த தகவல்,  சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு  இதற்கு முன் 1970  -ல்  நடைபெற்றது. அடுத்த நிகழ்வு 2095 ல் நடைபெறவுள்ளது.  சூரியன், புதன் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வை புதன் இடைமறிப்பு

அன்பான வேட்பாளர் பெருமக்களே! தரமான கல்வி சமமாக வேண்டும்..

அன்பான வேட்பாளர் பெருமக்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. அரசுப் பள்ளிகள் பலப்படுத்தப்பட வேண்டும்.. உண்மையான சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்.. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு உயர்கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.. தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.. பல்கலை நியமன முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.. மாவட்டந்தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட வேண்டும்.. அந்நியப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கக்கூடாது.. புதிய கல்விக்கொள்கை அவசியம் வேண்டும்.. ஆனால் அப்படியொரு முகமூடியில் இந்துத்துவ அஜெண்டாவை அமல்படுத்தும் முயற்சிகள்

மே 9 – புதன் இடை மறைப்பு: பேரா.  சோ.மோகனா

நமது சூரிய குடும்பம் என்பது சுமார் 4.6 பில்லியன் /460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. எப்படி தெரியுமா? ஒரு பெரிய அசுரத்தனமான விண்மீன்களுக்கு இடையிலுள்ள மூலக்கூறு மேகங்களின் மோதுதலால் ஏற்பட்ட  ஈர்ப்பு விசை சிதறலால்  உருவானது. இதில் சூரிய குடும்பத்தின் பெரும்பகுதி நிறை என்பது சூரியன் மட்டுமே. மீதம் உள்ள குட்டியூண்டு பொருட்களே சூரியனைச் சுற்றும் 8 கோள்கள் ஆயின. இவற்றுள்  அதிக நிறையுள்ளது வியாழன் தான். எவ்வளவு தெரியுமா? சூரிய குடும்பத்தின் மொத்த எடையில்

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனாய்வுத் தேர்வு ( TTT )-2015

கடந்த டிசம்பர், 19.2015 அன்று நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வு நடைபெற்றது.. இதில் துளிர் (27067), ஜந்தர் மந்தர் (5066) ஆக மொத்தமாக 32,172 குழந்தைகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.. இத்தேர்விற்கான மாநில ஒருங்கிணைப்பாளராக நண்பர். எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார்.. கள அளவில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அறிவியல் இயக்கத் தொண்டர்கள், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள்,

நாளை சூரிய கிரகணம்: 27 நிமிடங்கள் பார்க்கலாம்

வரும் புதன்கிழமை (மார்ச்9) காலை 6.20-க்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக் கிரகணம் 27 நிமிடங்கள் வரை நீடிக்கும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் என்.சுரேந்தர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் இக் கிரகணத்தை சூரியன் முன்பாதி உதித்தபின் காலை 6.21 மணியிலிருந்து 6.48 வரை சுமார் 27 நிமிடங்கள் வரை இதைப் பார்க்கலாம். நிலவு சூரிய தட்டின் முன்பாக தென் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி

அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் மீது தாக்குதல்: கண்டிக்கிறோம்

டெல்லி அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் இந்துத்துவா கும்பல் வழக்கறிஞர்களால் விரட்டி விரட்டி தாக்கப்படும் காட்சி. இவர் கன்னையாவுக்காக ஆதரவு வழக்கு தொடுத்துள்ளார். அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் ஜனநாயக விரும்பிகள் அனைவரும் கண்டிக்க வேண்டுகிறோம். (அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் :கண்ணாடிஅணிந்து ஓடி வருபவர்.)

தேசிய அறிவியல் தின போட்டிகள் அறிவிப்பு-2016

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. மேலும் விபரங்களுக்கு: தேசிய அறிவியல் தினம் & போட்டிகள்-2016

கோவை அறிவொளி வெள்ளிவிழா..

அன்புடையீர் வணக்கம்.         இந்தியாவில் முதன் முதலாக 1989-ம் ஆண்டு கேரளா மா  நிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் முழு எழுத்தறிவுத்திட்டம் தொடங்கப்பட்டு 9 வயது முதல் 45 வயதுவரையுள்ள எழுதப்படிக்கத்தெரியாத சுமார் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தன்னார்வத்தொண்டர்கள் மூலம் கேரள சாஸ்த்திர சாகித்திய பரிஷத்தால்  ஓராண்டில் எர்ணாகுளம் மாவட்டம் முழு எழுத்தறிவு மாவட்டமாக மாற்றப்பட்டு, இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்தது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் மத்திய- மாநில அரசுகளால்

Top