You are here
Home > அறிவிப்புகள்

ஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..

மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சார அமைப்பை உருவாக்கி  மூடநம்பிக்கைகளினால் ஏற்படும் உயிரிழப்பு , பொருள் இழப்பு குறித்து 40 வருட காலத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்து மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டுமென தொடர் இயக்கங்கள் நடத்தி வந்த மஹாராஷ்டிரா மாநில  அறிவியல் செயல்பாட்டாளர்  டாக்டர் நரேந்திர தபோல்கர்  2013 ஆக.20 அன்று  இந்து மத அடிப்படைவாதிகளால் காலை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தினத்தை தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்க அகில

அறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் கவனத்திற்கு: அதிகாலையில் வருபவர்கள் பள்ளியிலேயே குளித்து தயாராகலாம். காலை 8.30 மணிக்கு முன் வருபவர்கள் தெரிவித்தால் சிற்றுண்டி வழங்கப்படும். நிகழ்ச்சி 9 மணிக்கு துவங்குவதால் தாமதமாக வருபவர்களுக்கு சிற்றுண்டி வழங்க இயலாது.  தொடர்புக்கு: காஞ்சனா: 8838229072, அரவிந்த்: 9445418189 அபினாஷ்: 8667562784

மகத்தான மக்கள் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் மறைவு : அறிவியல் இயக்கம் அஞ்சலி…

கணிணி பழுதானால் நின்றுவிடும். அதுபோலவே மூளை பழுதானால் உடலியக்கம் நின்றுவிடும். சொர்க்கம் என்பதோ இந்த வாழ்வுக்கு பிறாகான உலகம் என்பதோ இல்லவேயில்லை.  அப்படி ஒன்று இருக்கிறது என்று நம்புவது இருட்டைக் கண்டு பயப்படும் மனிதர்களுக்கான தேவதைக் கதைகள் என்று அறிவித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மார்ச் 14 தேதி அன்று மறைந்து விட்டார் என்ற துயரச் செய்தி கண்டு ஒட்டுமொத்த   அறிவியல் உலகமும் அவரை அறிந்தோரும் துயருற்று உள்ளனர்.

ஆசிரியர் தின போட்டி முடிவுகள் 2017

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. போட்டிகளில் சுமார் 2000 பேர் பங்கேற்று படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாநிலத்திற்கு வந்த படைப்புகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கடந்த அக்.22 அன்று  பழனியில் நடந்த மாநில நிர்வாகக் குழுவில் அறிவிக்கப்பட்டன. பங்கேற்ற மற்றும் மாவட்ட , மாநில அளவுகளில் வெற்றிபெற்ற

ஆசிரியர் தின போட்டிகள் அக்.23ல் – மாநில அளவிலான பாராட்டு விழா, விழுப்புரம்

அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினப் போட்டிகளில் மாவட்ட/ மாநில அளவுகளில் முதல் மூன்று இடம் பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மாநில அளவிலான பாராட்டு விழா அக்.23 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் நடைபெற உள்ளது.. இந்நிகழ்வில் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் மாவட்ட அளவில் / மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நண்பர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநில / மாவட்ட 

ஆசிரியர் தினப் போட்டி முடிவுகள் அறிவிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் அறிவிக்கப்பட்டதன் அடிப்ப்படையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் வந்திருந்தன.. அவற்றுள் முதல் மூன்று இடம் பெற்ற படைப்பாளர்கள் விபரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது.. பள்ளி மாணவர்களுக்கான அன்புள்ள ஆசிரியருக்கு என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சமத்தூர் மாணவி நா.சுகப்பிரியா முதலிடத்தையும்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: பெயர் பதிவுக்கு ஆக. 16 கடைசி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் இம்மாதம் 16ஆம் தேதிக்குள் பெயர் பதிவு செய்துகொள்ளலாம் என தக்கலையில் நடைபெற்ற வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப குழுமம் உதவியுடன் "நிலைப்புரு வளர்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்பம்  மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள்' என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது.  இம்மாநாட்டில் பங்கேற்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு

ஆகஸ்ட் – 6 &9 ஹீரோசிமா – நாகசாகி நினைவு தினப் போட்டிகள் 2016

….. போட்டிகள் ….. போட்டி வகுப்பு தலைப்பு அளவு ஓவியம் 4 & 5 வகுப்பு ஜப்பானே ஜப்பானே                      ( ஆகஸ்ட் 6 & 9 ) உனக்குஎன்னஆச்சு ? A4 size white sheet ஓவியம் 6,7,8 வகுப்பு ” ஹிரோசிமாவும் மனித ஆன்மாவும் ” A4 size white sheet கட்டுரை 9 &10 வகுப்பு ” அமைதியின் விலை ” 4 பக்கத்திற்குமிகாமல் கட்டுரை 11 & 12 வகுப்பு ” அன்புமலர்களும்அணுஆயுதங்களும் ” 4 பக்கத்திற்குமிகாமல் கவிதை கல்லூரி ” இனி ஒரு புவிசெய்வோம் “ 1 பக்கஅளவில் மாவட்டத்தில்சிறந்த 3 படைப்புகளைமாநிலத்திற்குஆக. 20ந் தேதிகுள்ளாக அனுப்பி வைக்குமாறு

ஆக. 6-ல் ஹிரோஷிமா நாகசாகி நினைவு தின ஓவியப் போட்டிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தின ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. புதுக்கோட்டை கலீப் நகரில் கிளைத் தலைவர் க. உஷாநந்தினி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அவ்வியக்கக் கிளைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கலீப்நகர் மருப்பிணி சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அக்குடியிருப்பின் நடுவே உள்ள மைதானத்தில் முளைத்துள்ள முள்புதர்களை

மதுரையில் புதிய கல்விக் கொள்கை கலந்துரையாடல் கூட்டம்

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம்  நியமித்த திரு டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் கமிட்டி தனது அறிக்கையை மே இறுதியில் சமர்ப்பித்து உள்ளது. ஆனாலும் இந்த அறிக்கையானது இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படவில்லை. “அரசு உடனடியாக வெளியிடவில்லை எனில் நானே வெளியிடுவேன்” என குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் அவர்களே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினை வலியுறுத்தி வருகிறார்..  இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியிட்ட இக்கமிட்டியின் அறிக்கையின் முழுவடிவமும் இணையத்தின் மூலமாக

Top