You are here
Home > வளர்ச்சி

தஞ்சையில் வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு

20/7/2019 அன்று அறிவியல் இயக்க வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு தஞ்சாவூரில் நடை பெற்றது. அகில இந்திய அறிவியல் இயக்கங்களின் கூட்டமைபின் பொதுச்செயலாளர் பேரா,பொ.இராஜமாணிக்கம் மாநாட்டினை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இயற்கை வள மேம்பாட்டில் தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்& விளைவுகள் குறித்து கருத்தாளர்கள் திருவாளர்கள் P.K.இராஜன், V.சேதுராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இரண்டாண்டு வளர்ச்சி உப குழுவின் சார்பில் நடைபெற்ற பணியறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஸ்டிபன் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து அறிக்கை மீதான கருத்துகளையும்,எதிர்கால பணிகளையும்14 நபர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு எடுக்கவுள்ள பகுதிகளைக் குறிப்பிடும் வரைபடம்.   ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓஎன்ஜிசி நிறுவன விண்ணப்பங்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் 22 எண்ணெய் மற்றும் எரிவாயு சோதனைக் கிணறுகளை 21 கிராமங்களில் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான அனுமதியை கோரி கடந்த 2016-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஓஎன்ஜிசி விண்ணப்பித்தது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்; வடகாட்டில் தொடரும் போராட்டம். – அறிவியல் இயக்கம் ஆய்வு!

புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு உறுதியான அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என அறிவித்து வடகாட்டில் 7-வது நாளாக சனிக்கிழமையன்றும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. வழக்கம்போல தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் பயிர்களைச் சுமந்தும் கருப்புக்கொடிகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சங்கு ஊதியும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில

மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

பொருளாதார விரிவாக்கத்திற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 15.2.2017 ல் கூடியது. இக்கூட்டத்தில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதலீடு அதிகரிப்பது, பன்னாட்டு கம்பெனிகள் முதலீடு செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவில் பூமிக்கடியில் ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியும் உள்ளடங்கியுள்ளது. வானக்கன்காடு பகுதியில் 92 -93 களிலும், கருக்காகுறிச்சி, நல்லான்கொல்லை, வடகாடு ,கோட்டைக்காடு ஆகியபகுதிகளில்  2006ம் ஆண்டுகளிலும் இதற்கான முன்னோட்டப்

ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி

கொண்டங்கி ஏரியைப் பாதுகாக்க வலியுறுத்தி கடலூரில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூரிலிருந்து சுமார் 4 கி.மீ, தொலைவில் 300 ஏக்கர் பரப்பில் கொண்டங்கி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் கரையாக கேப்பர் மலை அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடலூர் நகர மக்கள் மட்டுமின்றி புருகீஸ்பேட்டை, வெட்டுக்குளம், கரையேறவிட்ட குப்பம் உள்ளிட்ட கிராம மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் விவசாயப் பணிகளுக்கு இந்த ஏரி நீர் பயன்பட்டு

திருநந்திக்கரையில் கிராம வளர்ச்சி மையம் திறப்பு

குலசேகரம் அருகே திருநந்திக்கரையில் கிராம வளர்ச்சி மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருந்திக்கரை கிராம வளர்ச்சிக்கான மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மலர் சுயஉதவிக் குழு இணைந்து திருநந்திக்கரையில் மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் திறன் மேம்பாடு மற்றும் இயற்கை விவசாயம், சுகாதார விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யும் வகையில் கிராம வளர்ச்சி மையம் அமைத்துள்ளது. இம்மையத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் பி.டி.

தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள்

தண்ணீர்  லாரிகளில் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பது நமக்குப் பழகிப் போன காட்சிதான். ராஜஸ்தானும் இதற்கு விதிவிலக்கல்ல. டைம்ஸ் ஆப் இந்தியா தனது 2016 மே 1 நாளிதழில் தண்ணீர் பஞ்சத்தை மக்கள் சமாளித்த விதம் பற்றி மூன்று கட்டுரைகளை  வெளியிட்டிருக்கிறது. மூன்றையுமே ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஜெய்ப்பூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள  லபோரியா என்ற கிராமத்தில் நீங்கள் தண்ணீருக்காக அலையும் மக்களைப் பார்க்க முடியாது. அங்குள்ள

‘நீர்வழி’ இணைப்பு இயக்கம் சார்பில் ‘சென்னையை மீட்போம்’2 நாள் கருத்தரங்கு தொடக்கம்

எஸ்பிஐஓஏ கல்வி அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்புகள் உள்ளடங்கிய ‘நீர்வழி’ இணைப்பு இயக்கம் சார்பில் ‘சென்னையை மீட்போம்’ என்ற தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கம் சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கை பாடகர் டி.எம்.கிருஷ்ணா தொடங்கிவைத்தார். இதையொட்டி, சுற்றுச்சூழல் தொடர்பாக எஸ்பிஓஏ பள்ளி மாண வர்கள் உருவாக்கிய படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சியை நடிகை ரோகிணி திறந்துவைத்து பேசிய தாவது: சென்னை சேத்துப்பட்டில் என் வீடு அருகே வெள்ளத்தால்

Top