You are here
Home > சமம்

தென்காசி அருகே மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் விழிப்புணர்வையும், போலி அறிவியல் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விழிப்புணர்வையும் சாதாரண மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு முகாம் “எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்“ என்ற வாசகத்துடன் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 40 அறிவியல் இயக்கங்கள் இணைந்து இந்த முகாம்களை ஒரு வருடம் நடத்த இந்த இயக்கங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதம் 7–ந் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு (2017)

அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  மலர் மகளிர் மேம்பாட்டு இயக்கத்தின்  தக்கலை ஒன்றிய மாநாடு அழகியமண்டபத்தில்  நடைபெற்றது. மாநாட்டுக்கு பி.மேரிலதா தலைமை வகித்தார்.  மாநாட்டை கௌரவத் தலைவர் ஷெலின்மேரி  தொடங்கிவைத்து பேசினார். சுசிலா வரவேற்றார். மாநாட்டில் கல்வி தீபம் ஏற்றப்பட்டு அரசுப் பள்ளிகளை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் கவிஞர் ஹைதர்அலி  சிறப்புரையாற்றினார். கிராம ஒருங்கிணைப்பாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல்  இயக்க மாவட்டத் தலைவர்கள் சிவஸ்ரீ

தென்காசியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி

தென்காசி, : தென்காசியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் மையம், நாட்டு நலப்பணித்திட்டம்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோயில் முன்பு நடந்த பேரணிக்கு ஜெ.பீ.கல்வி குழுமங்களின் நிர்வாகி பிரான்சிஸ்கா தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்கள் ரஞ்சித்சிங், ஞானதுரை, ஜான்கென்னடி முன்னிலை

Top