You are here
Home > மாவட்ட நிகழ்வுகள் (Page 2)

பொன்னமராவதியில் அறிவியல் இயக்கம் சார்பில் கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

பொன்னமராவதி ஜூலை-27 பொன்னமராவதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதிய கல்வி கொள்கைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அலமேலு ஆரம்ப பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொன்னமராவதி கிளை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் புதிய கல்வி கொள்கை -2019 ல் உள்ள குறைகள்பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கு அறிவியல் இயக்க ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கருத்தாளராக கவிஞர்‌ முத்துநிலவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் புதிய

சேலத்தில் 3 ஆம் கட்ட வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். மாவட்டத்தின் 27 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் 3 ஆம் கட்ட ஒரு நாள் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் ஆத்தூர் கல்வி மாவட்டங்களுக்கு (பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல் & கெங்கவல்லி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று) 27-07-2019 ஆத்தூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாம் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமிகு.G.சுரேஷ் அவர்களின் அறிவியல் பரப்புவோம்,

தாரமங்கலத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுக்கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம், கிளை சார்பாக 24/ 7/ 2019 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 பற்றிய பொதுமக்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் தாரமங்கலம் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை தலைவர் திருமிகு. ராஜேந்திர சோழன் அவர்கள் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார்.. இந்த கூட்டத்திற்கு வரவேற்புரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம்

நாமக்கல்லில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் வழிக்காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை 23.07.2019 அன்று நாமக்கல் தெற்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திருமிகு. ரகோத்தமன் மாவட்ட பொருளாளர் வரவேற்புரை நல்கினார். திருமிகு. சகா கண்ணன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய குழந்தைகள்

சேலம் மாவட்டத்தில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 4 கல்வி மாவட்டங்களில் இரு வேறு நாட்களில் 4 மையங்களிலும் தனித்தனியே நடத்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட குழு மாவட்ட குழுவின் ஒப்புதலுடன் எடுத்த முடிவின்படி 20-07-2019 அன்று சங்ககிரி கல்வி மாவட்டம் மற்றும் எடப்பாடி கல்வி மாவட்டத்திற்கும் தனித்தனியாக நடைபெற்றது. சேலம் மற்றும் ஆத்தூர் கல்விமாவட்டங்களுக்கான பயிற்சி

பெருமாநல்லூரில் வல்லுநர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. 20-7-19 காலை முருகு மெட்ரிக் பள்ளி மற்றும் மதியம் பெருமாநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் நடைபெற்றது. திண்டுக்கலில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட து.தலைவர், ஆசிரியர் மற்றும் வானியலாளர் திரு.சுப்பு உலகநாத பாண்டியன் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை

திருப்பூரில் இளம் பெண்கள் கருத்தரங்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று 18-7-19  புனித ஜோசப் பெண்கள் கல்லூரியில் பெண்களும் உடல் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் Dr.S.ரேனுகாதேவி கருத்துரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது..

அறிவியல் மனப்பான்மை குறித்து வல்லுநர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள்- விஞ்ஞானி / வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. 16-7-19 அன்று செல்வநாயகி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. தஞ்சாவூரில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சை மாவட்ட செயலாளர் மற்றும் மாநில கருத்தாளர் அறிவியலாளர் முனைவர்.சுகுமார் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள்

திருப்பூரில் பெண்கள் அறிவியல் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பெண்களுக்கான சமம் உபகுழு சார்பாக இன்று (14.07.2019) பெண்கள் அறிவியல் திருவிழா அமுதா நர்சரி மற்றும் தொடகப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 50 பெண்கள் பங்குபெற்றனர். சமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.ராணிராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆசிரியர் திருமதி. துளசிமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். பெண்கள் சுயசார்பாக திகழ்வதின் அவசியம் குறித்து கருத்துகள் பகிரப்பட்டது. மேலும், சோப் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவாக செல்வி ஹரினி நன்றி கூறினார்.

திருப்பூர் பத்மாவதிபுரம் பகுதி கிளையில் புதிதாக அறிவியல் இயக்க கிளை துவக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் வடக்கு கிளைக்கு உட்பட்ட காந்திநகர் - பத்மாவதிபுரம் பகுதியில் ஜூலை 24 அன்று அறிவியல் இயக்க கிளை புதிதாக துவங்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் திரு.ST.பாலகிருஷ்ணன் அவர்கள் "மாற்றத்திற்கான அறிவியல்" என்ற தலைப்பில் கலந்துரையாடினர். பின்பு புதிய நிர்வாகிகள் முன்மொழியப்பட்டு அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு.வீரமுத்து அவர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்

Top