You are here
Home > மாவட்ட நிகழ்வுகள்

அறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் கவனத்திற்கு: அதிகாலையில் வருபவர்கள் பள்ளியிலேயே குளித்து தயாராகலாம். காலை 8.30 மணிக்கு முன் வருபவர்கள் தெரிவித்தால் சிற்றுண்டி வழங்கப்படும். நிகழ்ச்சி 9 மணிக்கு துவங்குவதால் தாமதமாக வருபவர்களுக்கு சிற்றுண்டி வழங்க இயலாது.  தொடர்புக்கு: காஞ்சனா: 8838229072, அரவிந்த்: 9445418189 அபினாஷ்: 8667562784

உலக புத்தக தினம் கொண்டாட்டம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்களன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் துரைரவிச்சந்திரன் மற்றும் அறிவியல் இயக்க தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.இதேபோல், கோவை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு விஜயா பதிப்பக உரிமையாளர்

நாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி

நாமக்கல்லில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மூட நம்பிக்கைகளும்- அறிவியலும் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் மணிராஜா தலைமை வகித்தார். அதில் சிறப்பு அழைப்பாளாரகாக பங்கேற்ற, முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம் பேசியதாவது: ஜோதிடம் என்ற பெயரில், சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள், நட்சத்திரங்களை வைத்து சமுதாயத்தில் எவ்வாறு மக்களிடையே மூடநம்பிக்கைகள் வளர்ந்து வருகின்றன. தனிமனிதன் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட சமுதாயத்திற்கு, ஊறு ஏற்படுத்தக்கூடிய கலாசார செயல்பாடுகள்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு எடுக்கவுள்ள பகுதிகளைக் குறிப்பிடும் வரைபடம்.   ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓஎன்ஜிசி நிறுவன விண்ணப்பங்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் 22 எண்ணெய் மற்றும் எரிவாயு சோதனைக் கிணறுகளை 21 கிராமங்களில் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான அனுமதியை கோரி கடந்த 2016-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஓஎன்ஜிசி விண்ணப்பித்தது.

உண்டியலில் சேமித்த பணத்தில் புத்தகம் வாங்கிய மாணவர்கள்

செங்கை புத்தக திருவிழாவில் மாணவர்கள் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தில் புத்தகங்களை வாங்கி சென்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்ற நிர்வாகிகள் இணைந்து 2-வது முறையாக புத்தகத் திருவிழா நடத்துகின்றனர். இந்த, புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை செங்கல்பட்டு அருகே மேலமையூர் இந்தியன் வங்கி அருகில் உள்ள ஏவிஎன் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 40 அரங்குகள், ஒரு லட்சம் தலைப்பிலான பல லட்சம் புத்தகங்கள்

மின்னியல் கழிவுகள் முதல்வருக்கு மனு

கடலுார்: மின்னியல் கழிவுகளை தனியாக சேகரிக்க வலியுறுத்தி பசுமை நண்பர்கள் துளிர் இல்லத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பசுமை நண்பர்கள் துளிர் இல்ல குழுவினர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், கடலுார் நகரில் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை குறித்த தலைப்பில் ஆய்வறிக்கை சமர்பித்தோம். இதற்காக கள ஆய்வு மேற்கொண்டதில், கடலுார் நகரில் வீதிகளில் வீசப்படும் மின்னியல்

தேனியில் மாவட்ட துளிர் அறிவியல் வினாடி வினா

வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (அக்.25) மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா தேனி-கொடுவிலார்பட்டி கம்மவார் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் போட்டிகளைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 30 குழுக்கள் கலந்து கொண்டன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தமிழ், விளையாட்டு, பொது அறிவு ஆகிய சுற்றுகளில்

அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்

ராமநாதபுரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வாணியில் உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் இ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.சி.எஸ்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சொக்கநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பரிமளா டி ஆண்டனி துவக்கி வைத்தார். பல்வேறு தலைப்புகளில் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், இணைச்செயலாளர் எஸ்.கணேசன்,

அறிவியல் இயக்க மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு, செங்கல்பட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் வீரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மாதவன், மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட கவுரவ தலைவர் ஜனார்த்தனன், லிட்டில் ஜாக்கி மெட்ரிக் பள்ளி நிறுவனர் சாம்டேனி, செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்ற தலைவர் ராஜி, சமூக ஆர்வலர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட

அறிவியல் இயக்க வினாடி வினா:

கூடலுார் : அறிவியல் இயக்கப் போட்டியில் கூடலுார், பந்தலுார் பள்ளிகள் மாவட்ட போட்டிக்கு முன்னேறின.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவில் நடக்கவுள்ள ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டிகளை முன்னிட்டு, கூடலுார் வட்ட அளவிலான போட்டிகள், கூடலுாரில் நடத்தப்பட்டன.கூடலுார் ஐடியல் மெட்ரிக்., பள்ளி, ஜிடிஎம்ஓ., பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தாமஸ், புனித செபாஸ்டியன், புனித அந்தோணியார் பள்ளிகள், அத்திப்பள்ளி, வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்,

Top