You are here
Home > Article

விழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்

ஆசிரியர்களின் பொறுப்பு தன்னைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளைப் புரிந்து  கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதாகும். ஆசிரியரின் உதவியுடன் தானாகவே உருவாக்கிய வார்த்தைகளை மாணவர்கள் குழு ஆராய்கிறது. ஒரு குழு சிந்திக்கும் வார்த்தைகள் தான் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குகிறது என்றும் சிந்தனை இல்லாத வார்த்தைகள் செத்துப்போனவை என்று பாலோஃபிரெயர் கூறுகிறார். பிரேசில்  நாட்டில் விழிப்புணர்வுக்கான கல்வியை கொண்டு சென்றதோடு உலகத்திற்கே வழிகாட்டிய பாலோஃபிரெயரின் பிறந்தநாள் செப்டம்பர் 19. அவரது பிறந்தநாளில் நாம் கல்வியும் விழிப்புணர்வும்

NEP: எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய கல்வியின் இருண்டகாலம் என்கிற புத்தகம் தான் தமிழில் வெளியான முதல் விமர்சன புத்தகம். அதற்கு பிறகு வெளியானது தான் தோழர்.சண்மூகசுந்தரம் எழுதி வெளியாகியுள்ள என்ன சொல்கிறது "தேசிய கல்விக்கொள்கை-2019.? என்கிற புத்தகம். கல்வி குறித்து மிகுந்த அக்கறையோடு செயல்படும் பாரதி புத்தகாலயம் தான் மேற்கூறிய இரண்டு

வெறும் கல்வி உதவாது, அதை ஞானமாக்க வேண்டும்: கரூர் புத்தகக் கண்காட்சியில் நெல்லை கண்ணன் உரை

கரூரில் பள்ளி கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை சிறப்பு விருந்திராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: ஐயப்ப சாமிக்கு மாலை போடுவது வெறும் பக்தியாகவே இருக்க வேண்டும், வேஷமாக இருக்கக் கூடாது. மாலையை கழற்றிய உடனே மது அருந்தச் சென்றுவிடக்கூடாது. பலப்பல தெய்வங்கள் என மக்களைப் பிரிக்காதீர்கள், தெய்வம் ஒன்றே என்றார் பாரதி. இறைவனுக்கு உருவமே கிடையாது. ஒரு

ஆசிரியர்கள் மட்டும்தானா காரணம்? : முனைவர் என்.மாதவன்|

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள்கள் ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பானதே. கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எந்த ஒரு குழந்தையும் விரும்பத்தகாத முடிவுகளை எடுத்துவிடக் கூடாதே என்ற பதற்றமும் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், பல நேரங்களில் வேதனைப்படும் சம்பவங்கள் நடந்தே விடுகின்றன. அடிப்படையில் ஆசிரியரான நான், இது குறித்து என்னுடைய இரு மகன்களோடும் பள்ளியிலுள்ள குழந்தைகளோடும் ஆழமான விவாதங்களை மேற்கொண்டது உண்டு. அண்மையில் பத்தாம் வகுப்பு

ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு: குழந்தைகளை வதைக்காதீர்! — முனைவர் என்.மாதவன்

நடிகர் சந்திரபாபு ‘புதையல்’ என்ற திரைப்படத்தில் பாடி நடித்த பாடல், ‘உனக்காக எல்லாம் உனக்காக’. அப்பாடலில், துள்ளிவரும் காவிரியாற்றில் குளிப்பதற்கு இணையாக ஒப்பிடப்பட்ட விஷயம் பள்ளியிலே இன்னுமொரு முறை படிப்பது. பள்ளியில் படிப்பதே அவ்வளவு கஷ்டம் என்றால், தேர்வு எழுதுவது என்பது? பள்ளிக் கல்வி முறை தொடங்கிய காலந்தொட்டே தேர்வு பயத்திலிருந்து மாணவர்களை மீட்க முடியவில்லை. இந்தியாவில் நியமிக்கப்பட்ட கல்விக் குழுக்களுக்கும் குறைவில்லை. அதுபோலவே அக்குழுக்களின் ஆரோக்கியமான பரிந்துரைகளுக்கும் குறைவில்லை. பலரது

ஸ்டீபன் ஹாக்கிங் – புரட்சிகர விஞ்ஞானி : பேரா. சோ.மோகனா

பிரபஞ்சம் பற்றிய புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்த 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானி - முற்போக்கு சிந்தனையாளர். தமது அறிவியல் கருத்துக்களை ஆதாரத்தோடு ஆணித்தரமாக கூறிய மாற்றுத் திறனாளி - முனைவர் ஸ்டீபன் ஹாக்கிங், இப்போது நம்மிடையே இல்லை. அவரது புரட்சிகர அறிவியல் மூளை, 2018, மார்ச் 14 அன்றோடு தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டது. அவருக்கு உலகத்தின் சார்பில் அஞ்சலி. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.

சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்துக்கு வழிவகுக்கும்!

மீண்டும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கையில் பள்ளிக்கூடங்கள் வருவதெல்லாம் இனி நடக்கும் கதையா? அரசியல்வாதிகள் மனசு வெச்சா எல்லாம் நடக்கும். ஆனா, இதுக்குப் பின்னாடி சுத்துற பணம் அவங்களை மாற விடும்கிற நம்பிக்கையை என்கிட்டேயே பறிச்சுடுச்சு. ஒரு ஆசிரியர் நியமனத்துக்குப் பின்னாடி பத்து லட்சம் புரளுதுங்கிறாங்க. பணி மாறுதலுக்குப் பின்னாடி ரெண்டு லட்சம் புரளுதுங்கிறாங்க. பிறகெப்படி உள்ளாட்சி நிர்வாகம் கையில பள்ளிக்கூடங்களை ஒப்படைக்க மனசு வரும்? பண்டைய இந்தியாவின் இணைப்பு மொழி என்பதோடு

சமூகப் பிளவுக்குக் காரணமாகக் கல்விக் கொள்கை இருக்கக் கூடாது

எஸ்.எஸ்.இராஜகோபாலன் பேட்டி சென்னை, சாலிகிராமத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்த வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளியிருக்கிறது அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் வீடு. “பாலு மகேந்திரா உயிரோடு இருந்த வரைக்கும் வாரத்தில் ஒரு முறையாவது சந்திச்சுருவோம். நல்ல பேச்சுத் துணைகள்ல ஒருத்தரை இழந்துட்டேன்” என்கிறார். வீடு பரம சுத்தமாக இருக்கிறது. மிக மிக அத்தியாவசியப் பொருட்களைத் தவிர ஏதும் இல்லை. “பொருட்களைச் சேர்க்குறது எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கிறது இல்லை. இந்த ரெண்டு நாற்காலியும்

புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா?

எல்லோரும், ‘அந்த அறிக்கைக்குள் பூதம் இருக்கிறது’ என்றரீதியில் மிரட்டியதால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில்தான், ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ வரைவு தொடர்பான ஆங்கில ஆவணத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் (தமிழாக்கம்: பி.இரத்தினசபாபதி) படித்தேன். ரொம்ப மொக்கையான விமர்சனங்களைப் படித்துவிட்டு, மொக்கைப் படத்தைப் பார்த்தால்கூட நல்ல படமாகத் தோன்றுமே அப்படியிருந்தது என் அனுபவம். எனக்கு நல்ல, கெட்ட விஷயங்கள் இரண்டுமே கண்களில் பட்டன. கெட்ட விஷயங்களை எல்லாம்

இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்

இந்திய அரசு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் ‘வரைவு தேசிய கல்விக்கொள்கை - சில உள்ளீடுகள்’ என்றொரு அறிக்கையினை வெளியிட்டு, (தமிழில் 99பக்கம்) இதுபற்றிய மக்கள் கருத்தைக் கேட்டுள்ளது. http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf இதைப்படித்து முடித்ததும், நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில், இதைப்படித்து முடித்ததும், நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில், ‘கத்தரிக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு கைலாசம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு வாழைக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு வைகுந்தம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு’ - என்று துக்க வீடுகளில் பறை

Top