You are here
Home > அறிவிப்புகள் > தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் இன்று 14.10.2020 ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் திரு.எஸ்.சுப்ரமணி அவர்கள் தொடங்கி வைத்தார்.மாவட்ட தலைவர் திரு.பி.அச்சுதன் அவர்களும், மாவட்ட செயலாளர் திரு.சி.குணசேகரன் அவர்களும். மாவட்ட பொருளாளர் செல்வி.பெ.ஜெயசுதா அவர்களும்.மற்றும் திருப்பத்தூர் கோட்ட பொறுப்பாளர்களும், வாணியம்பாடி கோட்ட பொறுப்பாளர்களும், ஆம்பூர் ‌கோட்ட பொறுப்பாளர்களும் ஒன்றிய ,நகர செயலாளர்களும் கலந்துக் கொண்டனர். குறைந்தது 1000 பேக் இலக்காகக் கொள்ளப்பட்டது. இன்று 120 பேக்கிற்கான பணம் பெறப்பட்டது.
15.10.2020. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் மேற்கு பகுதி தேவலாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சியில் ஆளுக்கு ஒரு புத்தகம் மக்கள் இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.
உடன் மாநில பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி, கோட்ட செயலாளர்
என்.சபாரத்தினம் மற்றும் மாவட்ட பொருளாளர்
பி .ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Top