You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆளுக்கு ஒரு புத்தகம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆளுக்கு ஒரு புத்தகம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆளுக்கு ஒரு புத்தகம் என்ற திட்டமானது காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய கிழக்கு ஆரம்பப்பள்ளி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜோசப் ஆண்டோ ரெக்ஸ், இந்திராணி முன்னிலை வகித்தனர். தமிழகமெங்கும் புதிய செயல்பாடாக அக்டோபர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை குழந்தைகளுக்கான பேக், ஆசிரியர்களுக்கான பேக், பெண்களுக்கான பேக், பொது தலைப்பிற்கான பேக், உலகப் புகழ்பெற்ற கதைகளின் பேக் என தனித்தனியாக பதினான்கு புத்தகக் பேக்குகளில் விருப்பமானதை தேர்ந்தெடுத்துப் படிக்கும் வாய்ப்பை உருவாக்கவும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவும், சமூக மாற்றத்திற்கு அடிக்கோடிடவும், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் புத்தகம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவுகள், நண்பர்கள், குடும்ப நண்பர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள். வாங்கிக் கொள்ளலாம் வாங்க சொல்லலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஒரு நூலகம் திறக்கப்படும் ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்ற விவேகானந்தரின் கூற்றும், ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று மகாத்மா காந்தியிடம் கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்பதும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்றபோது புத்தகம் என்று கூறியதையும், எவ்வளவு கேளிக்கைகளை குழந்தைகளை கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலேயே உள்ளன என்ற வால்ட் டிஸ்னியின் கூற்றை நினைவுபடுத்தியும், வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நெல்சன் மண்டேலா போன்றோரின் புத்தக வாசிப்பை அறிந்து நம் கிராம பகுதியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திட சபதம் மேற்கொள்ளப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் வட்டார தலைவர் வீரபாண்டி, செயலாளர் சாலமன், துணை தலைவர் பாஸ்கர், இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் அலெக்சாண்டர் துரை,தலைமை ஆசிரியர்கள் பீட்டர், ஜான்பீட்டர், அருள்இளங்கோ, தாமஸ், ஜஸ்டின்திரவியம், பால்ராஜ், ஜோசப்சேவியர், வாசுகி, அருட்சகோதரி மோர்ஸ்பி இமாகுலேட் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஆளுக்கொரு புத்தகம் வழங்கப்பட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Top