You are here
Home > இயக்கச் செய்திகள் > ஆசிரியர் தின போட்டிகள் : கரூர் மாவட்டம்

ஆசிரியர் தின போட்டிகள் : கரூர் மாவட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஓவியம், கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஏராளமான படைப்புகள் வந்திருந்தன. அவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புகள் கரூர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.

1-5 வகுப்பு குழந்தைகளுக்கு என் கனவு பள்ளி என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பி.ஹரிசாரா, 4ம் வகுப்பு அ:பிரிவு, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, வாங்கல், கரூர்… ஆர்.ஆர்.கனிரேவதி, 4ம் வகுப்பு, ஆ பிரிவு, மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, புலியூர். கரூர்.. ஆர்.ஆகாஷ், 4ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியகுளத்துப் பாளையம், கரூர். ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

6-8ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு நான் படித்த புத்தகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ச.நவநீதகிருஷ்ணன், 6ம் வகுப்பு அ பிரிவு, செட்டிநாடு இராணி மெய்யம்மை மெட்ரிக் பள்ளி, புலியூர். க.கண்மணி, எட்டாம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சுக்காலியூர். தாந்தோணி ஒன்றியம், நா.யோகலட்சுமி, எட்டாம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. வெங்கமேடு. கரூர் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

அதே பிரிவில் நேசமிகு வகுப்பறை என்கிற சிறுகதைப் போட்டியில் க. தீபிகா, 6ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கள்ளை, தோகைமலை ஒன்றியம், சு.அங்குலட்சுமி, 8ம் வகுப்பு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரூர். ஏ.ஆர்.லக்ஸ்மணன், ஆறாம் வகுப்பு அ பிரிவு, செட்டிநாடு ராணி மெய்யம்மை பள்ளி, கரூர் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துரத்தியடிக்கும் தொழிற்கல்வி என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ச. லஷ்மி ஐஸ்வர்யா, 11 ம் வகுப்பு அ பிரிவு, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரூர். சி.சுகன்யா, பத்தாம் வகுப்பு, ராமகிருஷ்ண வித்யாலயா, நச்சலூர். த.சினேகா, பத்தாம்வகுப்பு, அரசினர் உயர்நிலைப்பள்ளி, என்.புதூர், கரூர் மாவட்டம்  ஆகியோர் முறையே முதல் முதல் இடங்களைப் பெற்றுள்ளனர்.

அதே பிரிவில் என் கனவு ஆசிரியர் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் பா.கஸ்தூரி, 12ம் வகுப்பு, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழைய ஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம். ப.தாரணி, 10ம் வகுப்பு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரூர். சி.மகிஷா, 11ம் வகுப்பு “B”, செட்டிநாடு இராணி மெய்யம்மை மெட்ரிக் பள்ளி, புலியூர் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்..

கல்லூரி மாணவர்களுக்கு ஊரடங்கு கற்பித்த பாடங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் சி.ஜெயலட்சுமி கல்லூரி முதலாமாண்டு, அன்னை மகளிர் கல்லூரி, புன்னஞ்சத்திரம், கரூர் முதல் இடம் பெற்றுள்ளார்..

ஆசிரியர்களுக்கு மாற்று வகுப்பறைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் திரு வெ.அமுதவேல், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, செவந்திபாளையம் சிறப்பிடம் பெற்றுள்ளார்..

அதே பிரிவில் தரமான கல்விக்கு தடைகளாவன என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் திருமதி ச.சித்ரா, பட்டதாரி ஆசிரியர், என்.புதுப்பாளையம், கரூர். திருமதி ந.கவிதா, இடைநிலை ஆசிரியர், கோவக்குளம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், திரு வெ.அமுதவேல், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செவந்திபாளையம் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.. திருவள்ளுவர் நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை திருமதி.கமலேஷ்வரி சிறப்பிடம் பெற்றுள்ளார்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் படைப்பாளர்களுக்கு அறிவியல் இயக்க மாநில மையத்தின் சார்பில் புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொண்ட , வெற்றி பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

 ——————————————————–

திருமதி ஆ. தமிழரசி, கல்வி உப குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கரூர்.

திரு  ஜான்பாட்ஷா, மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கரூர்

Leave a Reply

Top