You are here
Home > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

ஆசிரியர் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஓவியம், கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஏராளமான படைப்புகள் வந்திருந்தன. அவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த முதல் இரண்டு படைப்புகள் தேனி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.

1-5 வகுப்பு குழந்தைகளுக்கு என் கனவு பள்ளி என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் எம். சஷ்மிதா, ஐந்தாம் வகுப்பு, ஊ.ஒ.ஆரம்பப்பள்ளி கு.லட்சுமிபுரம், பா.திரிவேணிகா, இரண்டாம் வகுப்பு, அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி, மேலக்கூடலூர் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.

6-8ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு நான் படித்த புத்தகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் சீ.மணியாழினி, ஹயக்ரீவா மெட்ரிக் பள்ளி, கடமலைக்குண்டு, க.ராகப்பிரியா ஊ.ஒ.ந.நி பள்ளி அரண்மனைப்புதூர் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துரத்தியடிக்கும் தொழிற்கல்வி என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ச.தாரணி, ஒன்பதாம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, தும்மக்குண்டு, ம.ஜெயவர்த்தினி ஒன்பதாம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி தும்மக்குண்டு ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.

அதே பிரிவில் என் கனவு ஆசிரியர் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் ந.நவஜீவன் ஒன்பதாம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி,அம்மாபுரம், கோ.கோபிகா, பத்தாம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, கு.லட்சுமிபுரம் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்..

கல்லூரி மாணவர்களுக்கு ஊரடங்கு கற்பித்த பாடங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ஆர்.சீனிவாசன், தேனி, வெ.அனிதா, உத்தமபாளையம் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு மாற்று வகுப்பறைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் ஆ.தனலட்சுமி, ஆசிரியர், பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், சீனிவாசன், கடமலைக்குண்டு ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்..

அதே பிரிவில் தரமான கல்விக்கு தடைகளாவன என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ஆர்.விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர், போடி ரெங்கநாதபுரம், மொ.சௌந்தர்ராஜன், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, தும்மக்குண்டு ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்..

போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் படைப்பாளர்களுக்கு அறிவியல் இயக்க மாநில மையத்தின் சார்பில் புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொண்ட , வெற்றி பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சுந்தர் மற்றும் தேனி மாவட்டத் தலைவர் மகேஷ், செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் மணிமேகலை, மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் உள்ளிட்ட அறிவியல் இயக்க தேனி மாவட்டக் குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Top