You are here
Home > கல்வி > அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா

அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்வி உபகுழு தாரமங்கலம் கிளை, சேலம் மாவட்டம்.. மாற்று கல்வியின் பிதாமகன் “பாவ்லோ பிரையரே”பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிகழ்வுக்கான அறிக்கை.

செப்டம்பர் 21 ,2020 திங்கள் அன்று மாலை 6 :00 மணிக்கு ஜூம் வழியாக துவங்கியது. நிகழ்வுக்கு திருமிகு. வடிவுக்கரசி இணை செயலாளர், Tnsf தாரமங்கலம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்வினை சிறப்பாக நெறிப்படுத்தினார்.

நிகழ்வினில் கலந்து கொண்டவர்களை திருமிகு. சரவணன், கல்வி உபகுழு, Tnsf தாரமங்கலம் அவர்கள் வரவேற்றார்.

மாற்று கல்வியின் முக்கியத்துவத்தை அழகான கவிதையாக வடித்து வாசித்தார் திருமிகு. இராஜேந்திர சோழன், தலைவர், Tnsf தாரமங்கலம்.

நிகழ்வின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை திருமிகு. R. K. லால், செயலாளர், Tnsf சேலம் அவர்கள் அழகாக எடுத்துரைத்தார்.

“இருளும் ஒளியும்” என்ற ச. தமிழ்செல்வன் அவர்கள் எழுதிய தனது அறிவொளி இயக்க பயண நூலினை திருமிகு.அருள் பிரகாஷ், பொருளாளர், Tnsf தாரமங்கலம் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

திருநெல்வேலியில் அறிவொளி இயக்கம் நடத்த தான் சந்தித்த அதிகார அழுத்தங்களை அழகாக கண்முன் கொண்டு வந்தார். மேலும் நடை பயணம் மூலம் தான் அடைந்த அனுபவங்களை பகிரும் போது களப்பணியின் சவால்கள் ஆழமாக புரிகின்றது.

மேலும் கல்வியினை முதன்முறை கற்போரிடம் எடுத்துசெல்ல வேண்டும் என்ற முனைப்பினை புத்தகம் முழுவதும் தொடர்ந்து காண இயல்கிறது என அழகாக ஆழமாக எடுத்துரைத்தார்.

நிகழ்வின் அடுத்த நிகழ்வாக தனது அறிவொளி இயக்க கலைப்பயண அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் திருமிகு. காவேரிதுரை வீதி நாடக கலைஞர் அவர்கள்.

அவரின் ஆரம்ப காலகட்டத்தில் அறிவொளி பணியாளராக பணியாற்றிய போது கிடைத்த பல்வேறு அங்கீகாரங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அவர் தங்களது இணையருடன் நடித்த பிள்ளைகள் எங்கே?, காலரா போன்ற நாடகங்களின் அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டு பாடல்களையும் பாடி வியக்க வைத்தார்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு திருமிகு. சுந்தரலிங்கம், கல்வி உபகுழு, Tnsf, தாரமங்கலம் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குறிப்பாக மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் தேனி சுந்தர் மற்றும் மாநில நிர்வாகி முகமது பாஷா உட்பட மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 35 பேர் வரை கலந்து கொண்டனர்.

நன்றி.

சோ. நோபிள்தாஸ்,
ஒருங்கிணைப்பாளர்,
கல்வி உபகுழு,
TNSF தாரமங்கலம், சேலம்.

Leave a Reply

Top