You are here
Home > அறிவிப்புகள் > இணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு : அறிவியல் இயக்கம்

இணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு : அறிவியல் இயக்கம்

செப்.8 உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கான இணையவழி கவிதைப் போட்டிகள் செப்.13 அன்று நடைபெற்றன.

6-8 வகுப்பு குழந்தைகளுக்கு எல்லாம் தேர்வுமயம் என்ற தலைப்பிலும் 9-12 வகுப்பு குழந்தைகளுக்கு தேர்வே என்னைத் தேறவிடு என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளின் ராஜ்ஜியத்தில் என்ற தலைப்பிலும் ஆசிரியர்களுக்கு மாறி வா கல்வியே மாநிலப் பட்டியலுக்கு என்ற தலைப்பிலும் பொதுப் பிரிவினருக்கு கொடுக்கவா திணிக்கவா கல்விக் கொள்கை என்ற தலைப்பிலும் இணையவழி கவிதைப் போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு பிரிவுப் போட்டிகளையும் முறையே தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநிலப் பொதுச் செயலாளர் சுப்ரமணி, அகில இந்தியப் பொதுச் செயலாளர் பேரா.பி.ராஜமாணிக்கம், மேனாள் மாநிலத் தலைவர் பேரா.மணி, கல்வியாளர் என்.மாதவன் ஆகியோர் தொடக்கி வைத்துப் பேசினர்.

மதிப்பீட்டாளர்களாக கலைக்கோவன், பன்னீர்ச்செல்வம், இளங்கோ, திருக்குமரன், முத்துக்குமாரி, நிதிஷ்குமார், ஜெயசீலன், நகுலா சிவநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து செப்.14 அன்று மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் பேரா.வெ.சுகுமாறன் தலைமையில் கல்விக் கொள்கை என்பது.. என்கிற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.. பேரா.கலைநேசன், திருமிகு.சாஸ்தா சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. அறிவியல் இயக்க மாநில செயலாளர் முனைவர்.சேதுராமன் தொடங்கி வைத்துப் பேசினார். கல்வியாளர் ஷாஜகான் கருத்துரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இணையவழி கவிதைப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.. மொத்தம் 27 மாவட்டங்களிலிருந்து சுமார் 300 கவிஞர்கள் பதிவு செய்திருந்தனர்.. கவிபாடியவர்களின் குரல்வளம், கருத்து, பாவனை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு பின்வரும் கவிஞர்கள் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..

6-8 வகுப்பு குழந்தைகள் பிரிவில் இர்பான் (ஈரோடு மாவட்டம்), ஜஸ்டின் (கன்னியாகுமரி மாவட்டம்), டி.பூபதி (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்..

9-12 வகுப்பு மாணவர்கள் பிரிவில் ஹேமதாரணி (விழுப்புரம்), வெங்கடேசன் (கள்ளக்குறிச்சி), சுபலட்சுமி (மதுரை) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்..

கல்லூரி மாணவர்கள் பிரிவில் அரவிந்தன் (கிருஷ்ணகிரி), சிந்துமணி (தர்மபுரி), விக்னேஸ்வரி (தேனி) ஆகியோர் முறையே முதல் இடங்களைப் பெற்றனர்..

ஆசிரியர்கள் பிரிவில் வடிவேல் (காஞ்சிபுரம்), ஜாய்ஸ் கென்னடி (நெல்லை), சுபாலட்சுமி (திருவாரூர்) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்..

பொதுமக்கள் பிரிவில் ஜெயஸ்ரீ (கோவை) பாவலர் கருமலைத் தமிழாளன் (கிருஷ்ணகிரி), சுரேஷ் (திருவள்ளூர்) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்..

மாநில பொருளாளர் ஆர்.ஜீவானந்தம் நிறைவுரை வழங்கினார்.. மாநில கல்வி உபகுழு உறுப்பினர்கள் தீனதயாளன், மணிகண்டன், பரமேஸ்வரி, மலர்ச்செல்வி, முனுசாமி, சக்திவேல், சங்கர், மோசஸ்பிரபு, டோம்னிக்ராஜ், இளங்கோவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். எழுத்தறிவு தின நிகழ்வுகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றியுரை வழங்கினார்.. மாநிலச் செயலாளர் தேனி சுந்தர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்..
 
பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மின்சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அளவில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற படைப்பாளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையத்திலிருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தேனி சுந்தர்

மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி உபகுழு

மின்னஞ்சல் : tnsf.kalvikulu@gmail.com

Posted by Tnsf Book Fair on Monday, September 14, 2020

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில கல்வி உபகுழு சார்பில் நடைபெறும்"மாறி வா கல்வியே மாநிலப்பட்டியலுக்கு"

Posted by Tnsf Kallakurichi on Saturday, September 12, 2020

Leave a Reply

Top