You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை

அறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை

புதிய கல்வி கொள்கையின் பாதகங்களை விளக்கி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி வருகிறது..

அருகமை பள்ளிகளை மூடுதல், உயர் கல்வியில் அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி கல்லூரி படிப்புக்கு மேலும் நுழைவு தேர்வு என கல்வியை வணிக மயம் செய்திடவே புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அமைச்சரவை முடிவு செய்து அமலாக்கிட இருக்கிறது. மக்களவையில் விவாதம் செய்யாமல் முடிவு எடுத்துள்ளது மரபு மீறிய செயல்.. அதே நேரத்தில் மாநிலத்தில் கல்வி உரிமையை பறிக்கும் செயல் என தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களவை உறுப்பினர் களை சந்தித்து அறிவியல் இயக்கம் கோரிக்கை மனு வழங்கி வருகிறது. நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் எழுப்பி விட கடலூர் மக்களவை உறுப்பினர் TRV.S ரமேஷ் அவர்களிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர்.தாமோதரன் நேரில் மனு வழங்கினார்..

உடன் மாவட்ட துணை தலைவரும் கல்வி ஒருங்கிணைப்பாளரும் எஸ். பாலகுரு நாதன், மாவட்ட துணை செயலாளர் கே பாலு, பண்ருட்டி கிளை செயலாளர் எஸ்.பரமேஸ்வரி மற்றும் துணை செயலாளர் வே.பூர்வசந்திரன் உடன் இருந்தனர்.. .நாளை புதுடெல்லி அமைந்துள்ள நாடாளு மன்ற வளாகத்தில் திமுக சார்பில் புதிய கல்வி கொள்கை மற்றும் சுற்று சூழல் தாக்க வரைவு அறிக்கை எதிராகவும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடலூர் மாவட்டம் #teachersrejectnep2020

Leave a Reply

Top