You are here
Home > இயக்கச் செய்திகள் > NEP-2020ஐ திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை

NEP-2020ஐ திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை மனு..தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநில குழுவின் அறிவுரைப்படி 10.09.2020 அன்று, மத்திய அரசின் மக்கள் விரோத கல்விக் கொள்கையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துமாறு இராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி’ உறுப்பினரை சந்திக்க சென்றோம்.

அவர் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்குப் பின் ஓய்வில் இருப்பதால் தி.மு.க.பிரதிநிதி அரக்கோணம் ஜோதி அவர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தோம்.

சந்திப்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளர் அறிவொளி.ஏ.முத்துகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் மு.தருமன், மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர்.அ.கலைநேசன், அரக்கோணம் கோட்ட செயலாளர் வி.பத்மநாபன் உள்ளிட்ட அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , ராணிப்பேட்டை #TNRejectsNEP2020

Leave a Reply

Top