You are here
Home > கல்வி > புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை

செப்.12 அன்று மாலை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பி .வேலுச்சாமி அவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பரமேஸ்வரி, ஒட்டன்சத்திரம் அறிவியல் இயக்க கிளையின் இணை செயலாளர்கள் சுமித்ரா ,வினோதினி , மற்றும் துணைத்தலைவர்கள் ஆனந்தன் ,சுர்ஜித் மற்றும் ஆசிரியர் வஞ்சியப்பன் ஆகியோர் சந்தித்தனர் .

தேசிய கல்வி கொள்கை 2020 திரும்பப் பெற பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டுமாய் அறிவியல் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை கேட்டுக்கொண்டோம்.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பேசும்பொழுது தற்போது நீட் தேர்வு பயத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்க்கா வின் ஆடியோ மனதை கலங்க வைத்து விட்டது. மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு மற்றும் தேசிய கல்விக் கொள்கை திரும்ப பெற வலியுறுத்தி நாளை டெல்லியில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.. நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று கூறி எங்களுக்கு விடை கொடுத்தார்.

Leave a Reply

Top