You are here
Home > அறிவிப்புகள் > இந்திய ஆசிரியர் தினம் (செப்.5) முதல் சர்வதேச ஆசிரியர் தினம் (அக்.5) வரை புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இயக்கம்….

இந்திய ஆசிரியர் தினம் (செப்.5) முதல் சர்வதேச ஆசிரியர் தினம் (அக்.5) வரை புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இயக்கம்….

ஆசிரியர்கள் அனைவரும் புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்கின்றோம்..

#teachersrejectNEP2020

இந்திய ஆசிரியர் தினம் (செப்.5) முதல் சர்வதேச ஆசிரியர் தினம் (அக்.5) வரை புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இயக்கம்…..

AIPSN- JFME அழைப்பு

ஒரு நாட்டில் கல்விக் கொள்கையின் வெற்றி என்பது அந்நாட்டு ஆசிரியர்களின் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் தொடக்கம் முதலாகவே ஆசிரியர்களை மிகுந்த அவநம்பிக்கையோடும் சந்தேகப் பார்வையோடும் அணுகுகிறது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை-2020..

கல்வியின் தரம் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தொடர்ச்சியான தேர்வுகளில் மட்டுமே அடங்கி இருப்பதாக நம்புகிறது இந்த புதிய கல்விக் கொள்கை…

பணியில் சேர்ந்தது முதலாகவே நிபந்தனைகளுக்கு மேல் நிபந்தனைகளையும் தேர்வுக்கு மேல் தேர்வுகளையும் திணிக்கிறது இந்த கல்விக் கொள்கை…

நாமும் ஆசிரியராக முடியும் என்ற நம்பிக்கை சாதாரண மக்களுக்கு வந்துவிடவே கூடாது என்று வடிகட்டிக்கு மேல் வடிகட்டி வைத்து சலித்தெடுக்கிறது இந்தக் கொள்கை…

கடும் சோதனைகளையும் சிரமங்களையும் கடந்து பணிக்கு வந்த ஆசிரியர்களின் சம்பளம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் பற்றி எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்கிறது இந்த கல்விக் கொள்கை..

பணி அனுபவம், அர்ப்பணிப்பு, மாணவர் மைய கல்விச் சிந்தனைகள் போன்றவை எதுவும் ஆசிரியருக்கான தகுதியில் சேராது என்கிறது புதிய கல்விக்கொள்கை…

மாணவர் நிலைக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் முறைகள் வடிவமைப்பு அதற்கான வகுப்பறை சுதந்திரம் எதுவும் தேவையில்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை…

பள்ளிக் கல்வியை, உயர் கல்வியை ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனி ஆக்குகிறது புதிய கல்விக்கொள்கை…

கட்டற்ற கட்டணங்கள் வசூலிக்கலாம்…
கல்வியைத் தனியார் கூறுகட்டி விற்கலாம் என்கிறது இந்தக் கொள்கை..

கல்வியிலும் ஆசிரியர் பணியிலும்
இட ஒதுக்கீடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கின்ற புதிய கல்விக்கொள்கை-2020ஐ அனைவருக்கும் தரமான சமமான கல்விக்காகவும் கல்வியில் மாநில உரிமையை நிலைநாட்டவும் மீட்டெடுக்கவும் போராடும் ஆசிரியர்களாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம்….

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்… மாநில அரசு நிராகரிக்க வேண்டும்.. என மக்கள் அறிவியல் இயக்கங்களின் கல்விப் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்துகின்றோம்…

தேசந்தழுவிய இவ்வியக்கத்தில் இணைந்து போராட அன்போடு அழைக்கின்றோம்…

கல்வியைக் காப்போம்..!

தேசம் காப்போம்…!!

AIPSN & JFME

Leave a Reply

Top