You are here
Home > அறிவிப்புகள் > அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள் : கடைசி நாள்-செப்.15

அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள் : கடைசி நாள்-செப்.15

அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்குமான போட்டிகள் நடத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள்.. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன.

பிரிவுகள்ஓவியம்கட்டுரைகதை
1-5 வகுப்புகள்நான் விரும்பும் பள்ளி
6-8 வகுப்புகள்நான் படித்த புத்தகம்நேசமிகு வகுப்பறை
9-12 வகுப்புகள்துரத்தியடிக்கும் தொழிற்கல்விஎன் கனவு ஆசிரியர்
கல்லூரி மாணவ-மாணவியர்ஊரடங்கு கற்பித்த பாடங்கள்மாற்றத்திற்கான அறிவியல்
ஆசிரியர்கள்தரமான கல்விக்கு தடைகளாவன..மாற்று வகுப்பறைகள்
பொதுதாய்மொழிவழிக் கல்வியின் தற்போதைய நிலைகல்வியும் சமூக மாற்றமும்

குறிப்பு:

  • பங்கேற்பாளர் ஒரு பிரிவில் ஒரு படைப்பு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்..
  • படைப்புகள் சொந்தமானதாகவும் வெளிவராததாகவும் இருக்க வேண்டும்.
  • கட்டுரை, கதைகள் A4 தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓவியங்கள் A4 தாளில் வரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.
  • படைப்புகள் அஞ்சலில் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகவரிக்கு  படைப்பாளர்களின் தெளிவான முகவரியுடன் (பெயர், முகவரி, பின்கோடு, அலைபேசி) அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  • பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  • மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 3 படைப்புகளைத் தேர்வு செய்து மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு செப்.15க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  • மாவட்ட, மாநில அளவில் தேர்வுபெறும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று படைப்பாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் புத்தகங்களாக மாநில மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.

                                       ச.தீனதயாளன்

மாநில ஒருங்கிணைப்பாளர்

ஆசிரியர் தினப் போட்டிகள் -2020

9626110555 / 9865304380 / 9750271608 / 9095339097 / 9786003796 / 9566397827

Leave a Reply

Top