You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > 9 வது ஒசூர் புத்தக திருவிழா

9 வது ஒசூர் புத்தக திருவிழா

கொரனா தொற்று மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கினாலும் வாசிப்பை முடக்க முடியாது என்று மீண்டும் நிருபித்துள்ளது ஒசூர் புத்தகத் திருவிழா

கொரனா ஊரடங்கில் 9 வது ஒசூர் புத்தக திருவிழா ஒசூர் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு நல்கிய ஒசூர் மக்களுக்கு நன்றி ! நன்றி!!
இரண்டு நாட்கள் புத்தக திருவிழாவில் ரூ 415000 மதிப்புள்ள புத்தக விற்பனை கொரானா காலத்தில் விற்பனையாகியுள்ளது என்பது மிக பெரிய சாதனையே இந்த மிக பெரிய பணியை வெற்றிகரமாக நடத்தி கொடுத்த ஒசூர் மக்களுக்கும் , தன்னார்வலர்களுக்கும் , உதவி செய்த அமைப்புகளுக்கும் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய ஒசூர் மாநகராட்சி ஆணையாளர்களுக்கும் , ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், அவர்களுக்கும், காவல்துறை மாவட்ட துணைக்காணிப்பாளர் அவர்களுக்கும், ஒசூர் தாசில்தார் அவர்களுக்கும் நன்றி! நன்றி!!

அதே போல் 9 வது ஒசூர் புத்தக திருவிழாவை மாபெரும் வெற்றி பெற செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் , தன்னார்வலர்களுக்கும் , ஒசூர் புத்தக திருவிழா ஆலோசகர் அவர்களுக்கும் , புத்தக பதிப்பாளர்களுக்கும்

ஒசூர் புத்தக திருவிழா சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

2021 ஆண்டிற்கான 10 வது ஒசூர் புத்தகத் திருவிழாவை ஜூலை 9 முதல் 21 வரை 12 நாட்கள் நடத்துவது என்ற அறிவிப்போடு 9 வது ஒசூர் புத்தகத் திருவிழா நிறைவுபெற்றது.

நன்றி ! வணக்கம்.

ஒசூர் புத்தகத் திருவிழா
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

கொரானா ஊரடங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயல்பாடுகளுக்கு உதவி புரிந்த இளைஞர்கள் 9 வது ஒசூர் புத்தக திருவிழாவில் இரண்டு நாட்கள் அனைத்து செயல்பாடுகளை முன்னின்று செய்த தொண்டர்களை ஒசூர் தாசில்தார் கவுரித்த நிகழ்வு.

👉வீட்டுக்கு ஒரு நூலகம்

👉ஒசூர் புத்தக திருவிழாவில் புத்தக ஆர்வலர்களை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு தமிழகத்திலேயே முதல் முறையாக 2019 ஆம் ஆண்டு ஒசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் திரு சுப்பிரமணி துவக்கி வைத்த புத்தக சேமிப்பு திட்டத்தில் கடந்த *ஆண்டு 102 நபர்கள் இணைந்துள்ளார்கள் இந்த ஆண்டு 200 ஆர்வலர்களை இணைக்க முடிவு செய்ததின் அடிப்படையில் ஒசூர் தாசில்தார் திரு செந்தில்குமார் அவர்கள் அதற்கான முழுத் தொகையை செலுத்தி புத்தக சேமிப்பு திட்டத்தில் தன்னை இணைந்து கொண்டு முழு தொகையையும் செலுத்திய நிகழ்வு

Leave a Reply

Top