You are here
Home > இயக்கச் செய்திகள் > புதிய கல்விக் கொள்கை கருத்து கேட்பு

புதிய கல்விக் கொள்கை கருத்து கேட்பு

அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கு வணக்கம்.🙏🙏🙏🙏

நாளை முதல் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, இந்தியா முழுவதும் அனைத்து வகைப் பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியப்பெருமக்களிடமும் கருத்து கேட்கப்படவுள்ளது. எனவே இதுவரை புதிய கல்விக் கொள்கை பற்றி அனுப்பப்பட்ட, விவாதிக்கப்பட்ட அனைத்து கருத்துக்களையும் மனதில் கொண்டு, அதன் நன்மை தீமைகளையும், சாதக பாதகங்களையும் நன்கு அலசி ஆராய்ந்து, நமது தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த, நமது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களின் வாழ்வும், வளர்ச்சியும், எதிர்காலமும் சிறிதும் பாதிக்கப்படாத வகையில் தங்கள் (கருத்து எதுவாக இருந்தாலும்) கருத்துக்களை https://innovateindia.mygov.in/nep2020/ என்ற இணைய தளத்திற்குச் சென்று நாளை (24-08-2020) முதல் 31-08-2020 க்கு முன்னர் தவறாது பதிவு செய்துவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
தாங்கள் சார்ந்திருக்கும் அனைத்து ஆசிரியக் குழுக்களுக்கும், தங்களின் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் இச்செய்தியை அனுப்பி அவர்கள் அனைவரின் கருத்துக்களையும் பதிவு செய்ய வேண்டுமாறு, உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.

மாணவர்களின் எதிர்காலமே….
நமது இந்தியத் திருநாட்டின் எதிர்காலம். 💐💐💐
💥💥💥💥
இப்பொழுது இவையிரன்டும் உங்கள் கைகளில்…
💥💥💥💥
நன்றி.🙏🙏🙏🙏🙏 மு.பாலமுருகன், மாவட்ட செயலாளர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இராமநாதபுரம் மாவட்டம்.

Leave a Reply

Top