You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > தேசிய அறிவியல் மனப்பான்மைத் தினத்தை முன்னிட்டு கொரோனாவும் அறிவியலும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழி பேச்சுப் போட்டி

தேசிய அறிவியல் மனப்பான்மைத் தினத்தை முன்னிட்டு கொரோனாவும் அறிவியலும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழி பேச்சுப் போட்டி

மதுரை ஸ்பாட்லைட் யூடியூப் சேனல் மற்றும் மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தேசிய அறிவியல் மனப்பான்மைத் தினத்தை முன்னிட்டு கொரோனாவும் அறிவியலும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழி பேச்சுப் போட்டியை (22.08.2020) நடத்தின. தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்டப் பொருளாளர் திரு.P.ஹரிபாபு அவர்கள் அறிவியல் பாடலைப் பாடினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்டச் செயலாளர் திருமதி.கு.மலர் செல்வி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அகில மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் அவர்களும் ஆரிய வைஷ்யர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். செல்வக்குமார் அவர்களும் மதிப்பீடு செய்து வெற்றி யாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.ஸ்பாட்லைட் யூடியூப் சேனல் அமைப்பாளர் திரு.சீனிவாசன் அவர்களும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்டத் தலைவர் முனைவர்.இராஜேஷ் அவர்களும் இணையவழி பேச்சுப் போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Top