You are here
Home > கல்வி > திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்க இணையவழி கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்க இணையவழி கருத்தரங்கம்

      இன்று 23.08.2020 மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட கல்வி உபகுழு & தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி & தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு & தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் இணைந்து இணையவழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

✍🏻 இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் தலைவர் M. அசோக் அவர்கள் தலைமை வகித்தார்.

✍🏻 இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர்
M. செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

✍🏻 இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் S. சுப்ரமணி அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்.

✍🏻 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலாளர் M. மணிகண்டன் அவர்களும், மாவட்ட துணைத் தலைவர் R. சீத்தா அவர்களும் கருத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்து அறிமுகவுரை ஆற்றினார்கள்.

✍🏻 இந்நிகழ்ச்சியில் கருத்தாளர்களாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ச. மோஸஸ் அவர்களும், எழுத்தாளர் ஜே. ஷாஜகான் அவர்களும் கலந்து கொண்டு பள்ளிக்கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020 என்ற தலைப்பில் எழுச்சிமிக்க கருத்துரையை வழங்கினார்கள்.

✍🏻 பங்கேற்பாளர்கள் கேட்கும் கேள்விகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட கல்வி உபகுழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.அருண்விவேக் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

✍🏻 நிறைவாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் C. ஆரோக்கியராஜ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் Zoom வழியாகவும், Tnsf Book fair என்ற (Facebook) முகநூல் வழியாகவும், Tamilnadu Science Forum என்ற (You Tube) வலையொலி வழியாகவும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், அறிவியல் இயக்க, ஆசிரியர் சங்க மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு பார்த்தனர்.

Leave a Reply

Top