You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றான 51(A) H விதியின்படி

அறிவியல் மனோதிடம் கொண்டு,

மனித நேயம் வளர்த்து,

எதையும் விசாரித்தறிந்து,

மாற்றங்களுக்கான உணர்வுகளை உருவாக்கி,

அவற்றை மேம்படுத்துதற்கும்

அறிவியல் வளர்ச்சியையும்

அறிவியல் மனப்பான்மையும்

மக்களிடையே நட்பையும் வளர்க்க

தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தில்
உறுதியளிக்கிறேன்.

ஆகஸ்ட் 20 அறிவியல் மனப்பான்மை தினம்

உங்களோடு சில நிமிடங்கள்…

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை….

வணக்கம் . நண்பர்களே..

👉ஆகஸ்ட் 20 : என்ன தினம் தெரியுமா?

தேசிய மனப்பான்மை தினம் (National Scientific Temper Day).

ஆகஸ்ட் 20, இந்தியா முழுவதும் அறிவியல் இயக்க நண்பர்களால், தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

👉இதன் பின்னணி/ காரணம் என்ன தெரியுமா?

இன்றுதான் 7 ஆண்டுகளுக்கு முன்பு,
2013, ஆகஸ்ட் 20 ம் நாள்,
காலையில், மகாராஷ்டிராவில்,
நடைப்பயிற்சியில் இருந்தபோது,
காலை 7.30 மணி அளவில்,
அடையாளம் தெரியாத நபர்களால், மிக அருகில் துப்பாக்கியால் 4 குண்டுகள் தலையிலும். நெஞ்சிலும் துளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்… நரேந்திர தபோல்கர்.

👉 நரேந்திர தபோல்கரை ஏன் சுட்டுக்கொன்றார்கள் தெரியுமா?

ஒண்ணுமே இல்லப்பா.. உண்மைகளைச் சொன்னதுக்காகப்பா…

அவர் அப்படி என்னதான் சொன்னார்?

அனைத்துவிதமான மூடநம்பிக்கைகளயும் அகற்ற வேண்டும் . எப்படி மந்திரவாதிகள்/ ஜோசியக்கார்ர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும், அவைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் “
இவ்வளவுதான் அவர் சொன்னார் .
அதை மக்களிடம் சொன்னார் .
மக்களுக்கு புரியும்படிச் சொன்னார் .
இது போதாதா…? இதனாலேயே மதவெறியர்களின் கோபத்துக்கு ஆளானார்.

👉* நமது அரசியல் அமைப்பு என்ன கூறுகிறது?

இந்திய குடிமக்கள் அனைவருக்கும், யார் வேண்டுமானாலும் எந்த மதத்தில் இருக்கவும் உரிமை உண்டு.. சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் . ஆகவே

இந்திய அரசியல் அமைப்பின் சட்டவிதி 51(A) யில் ஒரு முக்கிய வழிகாட்டல் சொல்லப்பட்டுள்ளது;

அது என்னவெனில் மக்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வாழவும், மனிதநேயத்துடன் வாழவும், எதனை வேண்டுமானாலும் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்பது தான்..

நரேந்திர தபோல்கர்… அனைத்து மதங்களிலும் நிலவும் மூடப்பழக்கங்களைக் கேள்விக்கு உட்படுத்திய காரணத்துக்காகவே படுகொலை செய்யப்பட்டார்.

அவரைத்தொடர்ந்து
கோவிந்த் பன்சாரே, பின்னர், கல்புர்கி
பின்னர். கௌரி லங்கேஷ்கர்,
என…. தொடர்கொலைகள்..!

எதற்காக?
அவர்கள் சமூகநீதியை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னதற்காகவும், மூடநம்பிக்கைகளை துடைத்தெறிய வேண்டும் என்று சொன்னதற்காகவும்,
அறிவியற்பூர்வமாக அனைத்தையும் கேள்வி கேட்டதற்காகவும் தான் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட, சமூக விஞ்ஞானி, மக்களின் சமூகநீதிக்காவலர் Dr. நரேந்திர தபோல்கரின் நினைவாகவே
ஆகஸ்ட் 20, இன்று, இந்தியா முழுமைக்கும், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ( All India People Science Network, AIPSN) ஆகஸ்ட் 20 ம் நாளை, National Scientific Temper Day என, நாடு முழுவதும் அனுசரிப்பது என முடிவு செய்தது.

இன்று…. இந்தியாவில் அறிவியலுக்கு எதிராக பல்வேறு சாதி , மதவெறிப்போக்குகளும் ,மூடநம்பிக்கைகளும் ஊட்டி வளர்க்கப்படுகிறது . “
எமது நம்பிக்கை , பாரம்பரியம் ,பழக்க வழக்கம் …
இதில் யாரும் தலையிடக்கூடாது ,
விமர்சிக்கக்கூடாது”… என்கிற பெயரால் மனிதத்துக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் செய்யும்போக்கு ஓங்கி வருகிறது .

இன்னொருபுறம் ..
ஃபேக் சயின்ஸ் எனப்படும் போலி அறிவியல் மேல் மட்டத்தில் உள்ள சில மனிதர்களாலேயே ஊட்டி வளர்க்கப்படுகிறது .

எடுத்துக்காட்டு .
கோமியம் புற்றுநோய் போக்குமாம்….;
கண் தெரியாதவர்களுக்கு பார்வை வருமாம்…
காதில் கம்மல் போட்டால் இதய நோய் வராதாம்… செயற்கைக்கோள் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் மேலே வரும் போது ஒரு நிமிடம் நிற்குமாம் … இவை போன்ற கருத்துகள் எல்லாம் அறிவியல்ரீதியாக மிகவும் பிழையான / முற்றிலும் தவறானச் செய்திகளாகும். .
ஆயினும் திரும்பத் திரும்ப அவை பரப்பப்படுகிறது .

இந்தியாவில்… உள்கட்டமைப்பு வசதி இல்லாதது,
அறிவியல் மனப்பான்மை வளர்வதற்கு எதிரான சூழ்நிலை நிலவுவது..
மற்றும்
போலி அறிவியலைப் பரப்புவது … ஆகிய மூன்றும் மிகப்பெரும் சவாலாக உள்ளன.
இந்த சூழ்நிலையில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதே இன்றைக்கு தலையாய தேவை .

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை….

ஏன் எதற்கு எப்படி என்ன எதனால் எங்கு எப்போது எவரால் என ஒவ்வொன்றையும் கேள்விகளால் துளைக்கும் ….
அறிவியல் உண்மைகளைத் தேடும்….. சமூக உளவியலைக் கட்டி எழுப்புவோம்.

நாம்அனைவரும் அறிவியல் வழி நடப்போம்…!
அறிவியல்தான் மக்களை ஒன்றிணைக்கும் …!
நல்வழியில் கொண்டு செல்லும்….!
அனைவரையும் சமமாக நடத்தும்….!

எதனையும் கேள்வி கேட்கச் சொல்லும்….
அறிவியல் மனப்பான்மையை உணர்ந்து….,
அதனை நேர்மையாக பின்பற்றுவோம் என… தபோல்கர் கொலையுண்ட தினத்தில் உறுதி ஏற்போம்..

ஆகஸ்ட் 20, தபோல்கர் அவர்கள் கொலையுண்ட தினம் மட்டுமல்ல…
இது அறிவியல் மனப்பான்மையை,… அறிவியல் விழிப்புணர்வை,… அறிவியல் எண்ணங்களை,… அறிவியல்பூர்வச் செயல்பாடுகளைக்…
கயவர்கள் கொலை செய்த தினம் என்றே கொள்வோம் .

Leave a Reply

Top