You are here
Home > இயக்கச் செய்திகள் > Thulir, Jantarmantar – ”India Quiz 2020″ துளிர், ஜந்தர்மந்தர் – ”இந்தியா க்விஸ் 2020” August 23 – 4pm – 5pm ஆகஸ்ட் 23 மாலை 4-5 மணி

Thulir, Jantarmantar – ”India Quiz 2020″ துளிர், ஜந்தர்மந்தர் – ”இந்தியா க்விஸ் 2020” August 23 – 4pm – 5pm ஆகஸ்ட் 23 மாலை 4-5 மணி

அறிவியல் வணக்கம்.
கொரோனா ஊரடங்கில் தேசமே முடங்கிப் போயுள்ளது. உலகம் பெரும் பின்னடைவில் சிக்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு இயக்கங்களும் வாய்ப்புள்ள வடிவங்களில் ஏராளமான செயல்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைய வழியிலான ஏராளமான நிகழ்வுகளை நடத்தி வருகிறது. சிறப்பு மிகுந்த நிகழ்வுகளும், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் தொடர்ந்து இணைய வழியில் நடைபெற்று வருகிறது.
இனி ஒரு சில நிகழ்வுகள் மாநிலம் தழுவிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மிகச்சிறப்பான அளவில் பங்காற்றி இந்நிகழ்வுகளில் ஏராளமானோர் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கிட கேட்டுக் கொள்கிறோம்.
மாணவர்களுக்கான ஆன்லைன் வினாடி வினா
 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துளிர் வினாடி வினா நிகழ்வை கடந்த 25வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறது. தமிழகத்தின் தவிர்க்க இயலாத நிகழ்வாக கடந்த ஆண்டுகளில் துளிர் ஜந்தர்மந்தர் வினாடி வினாக்கள் இருந்து வந்துள்ளது.

 இந்த வருடம் துளிர் / ஜந்தர்மந்தர் வினாடி வினா 2020 நடைபெறும் காலத்தை நாம் இப்பொழுது முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் ஆயத்த முயற்சியாக நாம் ஒரு வினாடி வினா நடத்தலாம். பல்வேறு அமைப்புக்களும், நிறுவனங்களும் வினாடி வினா நிகழ்வில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க இயலாது.

 மாவட்டங்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற வேண்டும். வாய்ப்புள்ள அனைவரும் பங்கேற்க மாவட்டங்கள் செயலாற்ற வேண்டும். பள்ளிகளுக்கு தகவல்கள் அனுப்பி அவர்கள் மூலம் மாணவர்கள் பங்கேற்கும் ஏற்பாடுகள் செய்யலாம். வாய்ப்புள்ள அனைத்துக் குழுக்களிலும் பகிர்வதன் மூலம் மாநிலம் முழுவதும் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. மாவட்டங்கள் சிறப்புடன் பங்காற்றினால் மாபெரும் எழுச்சியான நிகழ்வாக இது அமையும்.

 4-5, 6-8, 9-10, 11-12 ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். தனி நபர்களாக பங்கேற்கும் வகையில் போட்டி நடைபெறும்.
 முதலில் ஆன்லைன் பதிவுக்கான படிவம் அனுப்பப்படும். 22.08.2020 இரவு 8.00மணி வரை பதிவு செய்யலாம்.
 பதிவு செய்பவர்களுக்கு வினாடி வினாக்களுக்கான லிங்க் மெயில் வழியே அனுப்பப்படும்.
 ஆகஸ்ட் 23 அன்று மாலை 4-5 மணிக்குள் இணையவழியில் வினாடி வினா நடைபெறும்
 தேர்வு செய்யும் 500பேர்கள் ஜூம் வழியிலான நிகழ்வுக்கு அழைக்கப்படுவர். அவர்களுக்கு விதிமுறைகள் அறிவிப்பும் மாதிரி போட்டியும் நடத்தப்படும்.
 பின்னர் மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்டு மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்படும். தொடர்ந்து மாநில அளவில் போட்டி நடத்தப்படும்.

மாவட்டங்கள் அதிக அளவில் கவனம் செலுத்தி இந்நிகழ்வை வெற்றிகரமாக்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

THULIR, JANTAR MANTAR “INDIA QUIZ 2020”
AUGUST 23 Sunday 4.00 P.M TO 5.00 P.M
Register and confirm your participation before 22.08.2020 8.00 p.m
 All the registered participants will receive a link to participate in the quiz. The participants should answer the questions in the questionnaire only between 4.00 pm and 5.00 pm on 23.08.2020.
 E certificate will be awarded to all the participants.
 Top scorers in minimum time will be selected for the next level.
 The Participants are advised not to get help from Family members and others.
 The questions will be in both Tamil and English Languages.
 The questions will be sent to the participant category wise, to which they applied.
 The competitions will be held in 4 categories.
CATEGORY I – STUDYING IN CLASS 4 AND 5
CATEGORY II – STUDYING IN CLASS 6, 7 AND 8
CATEGORY III – STUDYING IN CLASS 9 AND 10
CATEGORY IV – STUDYING IN CLASS 11 AND 12

அன்புடன்
எஸ்.சுப்பிரமணி
பொதுச்செயலர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Leave a Reply

Top