You are here
Home > இதழ்கள் > குழந்தைகள் அறிவியல் திருவிழா – 2. 0

குழந்தைகள் அறிவியல் திருவிழா – 2. 0

விளையாட்டாய் கற்போம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் குழந்தைகள் அறிவியல் மாத இதழ் சார்பாக முதல் துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா 20 நாட்கள் நடத்தப்பட்டது. முதல் நிகழ்வில் 30,000 குழந்தைகள் பங்கேற்று பெரும் வரவேற்பு அளித்தனர். தற்போது குழந்தைகள் அறிவியல் திருவிழா – 2. 0 நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்வு ஆகஸ்ட் 15 முதல் 29 வரை நடைபெற உள்ளது. சிறந்த கருத்தாளர்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு விளையாட்டாய் கற்போம் என்ற தலைப்பில் நிகழ்வினை நடத்த இருக்கிறார்கள்.6,7,8,9 வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். தங்களது மாவட்டத்தில் குறைந்தது 50 குழந்தைகளை பங்கேற்கச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிகழ்வில் பங்கேற்பதற்கான பதிவு படிவம், வழிமுறைகள் இத்துடன் இணைத்துள்ளோம். இது குழந்தைகளுக்கான பிரம்மாண்ட மேடை . கரோனா காலத்தில் மாற்றுக் கல்விக்கான செயல்பாடு…. அனைவரும் இணைந்து முன்னெடுப்போம். வெற்றி பெறுவோம்.
அன்புடன்
எஸ்.டி.பாலகிருஷ்ணன்
பொறுப்பாசிரியர்
துளிர்

Leave a Reply

Top