You are here
Home > அறிவிப்புகள் > EIA 2020-யை ரத்து செய்ய கோரி தொடர் கருத்தரங்கம்

EIA 2020-யை ரத்து செய்ய கோரி தொடர் கருத்தரங்கம்

அன்புமிக்க மாவட்ட செயலாளர்கள், மாநில, மாவட்ட வளர்ச்சி உபகுழு ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது இயக்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020” குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் விவாதங்கள், விழிப்புணர்வு பிரச்சாரம், அரசிற்கு பெருவாரியான அளவில் பல வடிவங்களில் கருத்துக்களை பதிவு செய்வது, “EIA 2020″யை ரத்து செய்ய கோருதல், தொடர் கருத்தரங்கம் நடத்துவது என திட்டமிட்டோம்.

அதன் ஒரு அம்சமாக இன்று 28.07.2020 முதல் 3 நாள் கருத்தரங்கம் திட்டமிடப்பட்டு அதன் நிகழ்ச்சி நிரலை இத்துடன் அனுப்புகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து அதிகப்படியான தோழர்களையும் ஆர்வலர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டுகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து குறைந்தபட்சம் 10 பேரை பங்கேற்கச் செய்திட மாவட்டச் செயலாளர்கள் முனைந்திட அன்புடன் வேண்டுகிறோம்..

வெ. சுகுமாரன், மாநில ஒருங்கிணைப்பாளர் , வளர்ச்சி உபகுழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

பதிவு: தேனி சுந்தர் ..

Leave a Reply

Top