You are here
Home > இயக்கச் செய்திகள் > கணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்

கணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்

வறுமை, ஈரோட்டில் பிறந்து, கும்பகோணத்தில் படித்து, தேர்வில் தோற்று, தற்கொலைக்கு முயன்று சென்னைக்கு வந்து படாதபட்டு தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து சில காலங்கள் லண்டனில் வாழந்து பின் தமிழகத்திலேயே தனது 32 வது வயதில் ஹெப்பாடிக் அமீயாசிசிஸ் தொற்றினால் ஈரல் சிதைந்து மரித்துப் போனவர்.

ஒரு வகையில் சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தவர் தான் ராமானுஜர். சிலாகிக்கும் வகையில் வாழ்ந்தவரல்ல வாழ்க்கையில்! கிட்டத்தட்ட நடுத்தரவர்கத்தினர் பலரும் கடந்து வந்த பாதை தான். ஆனால் கணிதத்தில் அவரின் சில கணக்குகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

அவரும் தேர்வுக்கு பயந்திருக்கிறார்! தோல்வியுற்று இருக்கிறார், கலெக்டரிடம் போய் இரண்டு வேளை உணவிற்கும், கணிதமெழுத பேப்பருக்கும் போய் வேண்டுகோள் வைத்திருக்கிறார். டார்வின் போல வெள்ளிக்கரண்டியோடு பிறந்தவரல்ல. போராட்டமே வாழ்க்கையாய் இருந்திருக்கிறது. Child prodigy. 12 வயதிலேயே கணிதப்புலியாய் இருந்திருக்கிறார். அப்பா ஜவுளிக்கடை குமாஸ்தா அம்மா கோவிலில் பாட்டுப்பாடி சின்னச்சின்ன வேலைகள் செய்து சொற்ப வருமானத்தில் கஷ்ட ஜீவனம்.

இவரையும் ஒரு புத்தகம் தான் மாற்றியிருக்கிறது. புத்தகத்தின் பெயர் A synopsis of elementary results in Pure and Applied Mathematics. 1880 ல் முதலாம் பதிப்பு, 1886 ல் மறுபதிப்பு. எழுதியவர் George Shoobridge Carr. இந்த புத்தகத்தில் ஆயிரக்கணக்கான தேற்றங்கள் இருந்திருக்கிறது. ஆனால் சில எந்த ஆதாரமும் அற்றதாக அல்லது குறைவாக இருந்திருக்கிறது. அதை தீர்க்கும் விதத்தில் ராமானுஜம் மேற்கொண்ட தீர்வுகள் இன்னும் பலப்படுத்தியிருக்கிறது அவரை. அதுவும் தனது 15 வது வயதில் இதை மேற்கொண்டிருந்தார். கணிதத்தில் அதீத ஆர்வமாய் இருந்ததால் மற்ற பாடங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சோபிக்க முடியாமல் இன்டர்மீடியட்டில் தோல்வியுற்றிருக்கிறார்.

3,900 தேற்றங்களை படைத்து, Pie இவரின் உன்னத படைப்பு. string theory க்கும் அவரின் தீட்டா functionக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முடிவிலியைக்கண்டறிந்தவர். இன்றைக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தில் அவரின் தேற்றங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. இன்றளவிலும் போற்றப்படுகிறார்.

இவரை கொண்டாடியவர்களில் பேரா. ஹார்டி முக்கியமானவர். இவரின் இழப்பு மற்ற யாவரையும் விட இவரை உலுக்கியிருக்கிறது! நாடி, நரம்பெல்லாம் கணிதமேறியவர். ஹார்டியும் இவரும் ஒரு வாடகைக்காரில் பயணம் செய்திருக்கிறார். வண்டியின் பதிவு எண் 1729. அசுவாரசியமான எண் என்று கூறியிருக்கிறார் ஹார்டி. இல்லை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அதிலும் சிறப்பை உணர்த்தியவர். அதனாலேயே அதற்கு ராமானுஜம் நம்பர் என்ற பெயர் சூட்டப்பெற்றது. படத்தைப்பார்த்துத்தெரிந்துகொள்ளுங்கள்.

நான்கு நோட்டுப்புத்தகங்கள், அதில் உள்ள தேற்றங்கள், சமண்பாடுகள் பின்னாளில் புத்தகமாய் வந்தது. கல்லூரியின் இளங்கலை முதலாமாண்டிலும் தோல்வி. ஆனால் அந்த சமயத்தில் அவர் கணித நோட்டுப்புத்தகங்கள் பிரபலமாகியிருந்தது. முறையான கல்லூரிப்படிப்பு இல்லை. காலத்தை ஓட்ட வேண்டுமே! கணிதத்துறையில் வேலைக்கு முயற்சிக்கலாம் என்று அந்த நேரத்தில் தான் சேசு ஐயரை சந்தித்திருக்கிறார். வேண்டுமானால் ஹார்டிக்கு கடிதம் எழுதிப்பாரேன் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். அவருக்கு ஒரு ஒன்பது பக்க கணித குறிப்புகளை அனுப்பியிருக்கிறார். அக்கடிதமும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இவன் நிச்சயமாக ஒரு பைத்தியக்காரனோகவோ, பெரிய அறிவாளியாகவோ இருக்கக்கூடும் என கணித்து காம்பிரிட்ஜில் தனது உடன் பணியாற்றுவோருடன் இரண்டரை மணி நேர ஆலோசனைக்குப்பிறகே பெரிய அறிவாளி தான் என முடிவெடுத்து அழைத்திருக்கிறார்கள். ஏப்ரல் 1914 ல் அங்கு செல்கிறார். மூன்று மாதங்களில் முதலாம் உலகப்போரும் தொடங்குகிறது. கிட்டத்தட்ட ஹார்டி மற்றும் லிட்டில்வுட்டுடன் பணிபுரிந்து Ph.D க்கு நிகரான பட்டம் பெற்றார். ராயல் சொசைட்டி ஆஃப் லண்டனின் ஃபெல்லோவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

சொந்த வாழ்க்கை அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியானதல்ல! மனைவியோடு வாழ்ந்ததென்னவோ சொற்ப காலம் தான். கடைசி காலத்தில் செட்டியார் பேட்டை என்று அழைக்கப்பட்ட, தற்போதைய சேத்துப்பட்டு, தனிநபராக புகைவண்டி வைத்திருந்த எம்பெருமான் செட்டியார் தான் அவர் நோயுற்றிருந்தபோது அவருக்காக பங்களா கொடுத்து, சமைத்துப்போட ஆட்களையும் நியமித்திருந்தார். ராமனூஜத்தின் மனைவியை சீட்டு மாமி என்றே அறிந்து வைத்திருந்தார்கள். பின் தத்தெடுத்த பையனை வளர்த்து படிக்க வைத்து வங்கியில் உத்தியோகம் வாங்கிக்கொடுத்து பாம்பேயில் அவர்களுடன் வாழ்ந்திருக்கிறார். தனது கணவர் அத்தனை அறிவாளி என்று உணர்ந்து இருக்கக்கூட மாட்டார். மனைவிக்கு எழுதும் கடிதம் கூட அவர் அம்மா வழி சென்றதால் சொல்லிக்கொள்ளும்படியான தாம்பத்ய வாழ்க்கையில்லை. இந்தியாவிற்கு வரும் போதே நோயுடன் தான் வந்திருக்கிறார். கடல் கடந்து திரம்பியதால் சொந்தக்கார்ர்களெல்லாம் கைவிட்டுவிட்டார்கள். செட்டியாரின் அபிமானத்தின். பேரில் தான் இறுதி வாழ்க்கை. மற்ற மேதைகள் போல புகைப்படங்கள் கூட அவ்வளவாக இல்லை.

இன்றோடு அவர் மறைந்து நூறு வருடங்கள் கடந்துவிட்டது. அதன் பொருட்டே ராமானுஜன் நினைவுக்கருத்தரங்கமொன்றை zoom இணையவெளியில் இந்திய கணிதவியல் மையத்தின் பேராசிரியர். முனைவர். ராமானுஜம் கருத்துரையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. சுமாராக 90 பேர் கலந்துகொண்ட இணையவெளிக்கூட்டம். சிறப்பாய் இருந்தது.

கணித மேதை ராமானுஜம் நினைவைப் போற்றுவோம்….!

Dr.S.Dinakaran
Associate Professor & Head
Department of Zoology
Centre for Research in Aquatic Entomology
The Madura College
affiliated to Madurai Kamaraj University
TPK Road, Madurai.625011
Tamil Nadu, India
Mobile: 91- 99949 – 00064
Office: 91-452-2639994
Fax: 0452 2675238
http://dinkarji.blogspot.com/
dinkarji@gmail.com

Leave a Reply

Top