You are here
Home > அறிவிப்புகள் > TNSF ஆசிரியர் தின போட்டிகள்: மாநில முடிவுகள் அறிவிப்பு

TNSF ஆசிரியர் தின போட்டிகள்: மாநில முடிவுகள் அறிவிப்பு

ஆசிரியர் தின போட்டிகள் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. 2019 ஆம் ஆண்டுக்கான போட்டிகளுக்கு 5-8 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வும் நானும்.. என்ற தலைப்பிலும் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் வகுப்பறை.. என்ற தலைப்பிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது.. என்ற தலைப்பிலும் ஆர்வலர்களுக்கு அரசுப்பள்ளிகள் இணைப்பும் அடைப்பும் என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன.  கல்லூரி மாணவர்களுக்கு நின்னா தேர்வு.. நடந்தா தேர்வு.. என்ற தலைப்பில்  கவிதைப் போட்டியும்  கல்வி என்ற பொதுத் தலைப்பில் சிறுகதைப் போட்டியும் அறிவிக்கப்பட்டது.

மாநில மையத்திலிருந்தும் திருவாரூர், சிவகங்கை, கடலூர், திருச்சி, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிறப்பான வகையில் பத்திரிகைச் செய்திகள் கொடுக்கப்பட்டன. அதன் விளைவாக வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், புதுவை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர், திருச்சி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 படைப்பாளர்கள் பங்கேற்றனர். அதிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் சிறந்த மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மாநில மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றிலிருந்து மாநில அளவில் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தேர்வுக் குழுவால் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் பங்கேற்ற, தேர்வு பெற்ற படைப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.. அனைவருக்கும் மாநில மையத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

TNSF: ஆசிரியர் தினப்போட்டி முடிவுகள்-2019.pdf

                                                                        ச.தீனதயாளன், மாநில ஒருங்கிணைப்பாளர்

ஆசிரியர் தின போட்டிகள் – 2019, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

94448 69679 / 904 714 0584

Leave a Reply

Top