You are here
Home > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்..

ஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்..

ஆசிரியர் தினப் போட்டிகள் – 2019 ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி முடிவுகள் விபரம்.

கடந்த செப் 5 ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு 4 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 22 பள்ளிகளில் இருந்து 257 படைப்புகள் கிடைக்கப்பெற்றன. மின் அஞ்சல் மூலமாக 2 கட்டுரைகள் கிடைக்கப்பெற்றது.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மதிப்பீட்டுப் பணிகள் இன்று (26/09/2019) அன்று முடிவுற்றது.

முடிவுகளின் விபரம் : தேர்வும் நானும் எனும் தலைப்பில் 5-8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் சிறப்பு 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் விபரம்.

1.கு.பிரதிக்‌ஷா – 6ம் வகுப்பு, யங் இந்தியா மெட்ரிக் பள்ளி ,சென்னிமலை

2.அ.கல்கிதா லக்ஸ்னா, 6ம் வகுப்பு, வேளாளர் மெட்ரிக் பள்ளி , திண்டல்

3.ர.நித்திஸ் -6ம் வகுப்பு, விவேகம் வித்யாபவன் மெட்ரிக் பள்ளி, நத்தக்காட்டு வலசு, அந்தியூர்.

நான் விரும்பும் வகுப்பறை எனும் போட்டியில் 9-12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான போட்டி முடிவுகள்:

1.B.நிஹிதா, 10ம் வகுப்பு, C.S.I. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோடு

2.S.சினேகப் பிரியா, 11ம் வகுப்பு, வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்.

3.ரா.ஜனனி, 9ம் வகுப்பு, ஸ்ரீ சத்யாசாய் பதின்ம மேல்நிலைப்பள்ளி, சித்தோடு

பள்ளி ஆசிரியர்களுக்கான என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது! பிரிவில்…

1.தே.இளவரசி,ப.ஆ. அறிவியல், அரசு மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலூர்.

2.மா.மாதினியாள், முதுகலை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலூர்,

3.சோ.தாட்சாயிணி, முதுகலை விலங்கியல், அரசு மேல்நிலைப்பள்ளி, அறச்சலூர்.

கல்வி எனும் பொதுத் தலைப்பில்  அனைவருக்குமான போட்டியில்,

1.T.கலைச் செல்வி, S.R.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி

2.த.பிரியங்கா , 12ம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலூர்.

3.ஆ.ஹேமா 10ம் வகுப்பு, சக்தி் மேல்நிலைப்பள்ளி, நாச்சிமுத்து புரம், சக்தி நகர், ஈரோடு.

இத்தகவலைப் பகிரவும், இத்தனை படைப்புக்கள் நமக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இவண்: செ.கார்த்திகேயன், ஆசிரியர் தினப் போட்டிகள் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு

Leave a Reply

Top