You are here
Home > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..

ஆசிரியர் தின போட்டிகள்: திருச்சி மாவட்ட முடிவுகள் அறிவிப்பு..

ஆசிரியர் தின போட்டி முடிவுகள் 2019 : செப்.5ம் தேதி அன்று திருச்சி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆசிரியர் தின போட்டிகள் – 2019 தலைப்புகள் வெளியிடப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பப் பட உள்ளது. தற்போது இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் பெயர் பட்டியில் இன்று (21.09.2019) வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுரை போட்டிகள்: 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தலைப்பு : தேர்வும் நானும்.. முதலிடம்: மு.தினேஷ், 5-ம் வகுப்பு, புனிதயோவான் வெஸ்ட்ரி சி.பி.எஸ்.இ பள்ளி, இரண்டாம் இடம்: ச.ஹரிணி ஸ்ரீ பிரசன்னா, 7-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி.பப்ளிக் பள்ளி. மூன்றாம் இடம்: பி. சிராஜீதீன், 8-ம் வகுப்பு, காஜாமியான் மேல்நிலைப்பள்ளி.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தலைப்பு : நான் விரும்பும் வகுப்பறை..  முதலாம் இடம்: ஆ. பிரியதரீஷினி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் – முசிறி. இரண்டாம் இடம்: ச. அப்துல் சஜீர், 10-ம் வகுப்பு, காஜாமியான் மேல்நிலைப்பள்ளி. மூன்றாம் இடம்: வே. இலாவண்யா, 11-ம் வகுப்பு, புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலப்புதூர்.

பள்ளி ஆசிரியர்களுக்கான தலைப்பு : என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது… முதலாம் இடம்: S. சுபஸ்ரீ, ஆக்ஸ் போர்டு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி. இரண்டாம் இடம்: வே. இலாவண்யா, பட்டதாரி ஆசிரியை (கணிதம்), அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் – முசிறி. மூன்றாம் இடம்: மா. கோபிநாத், தமிழாசிரியர், புனித யோவான் ஸஸ்ட்ரி சி.பி.எஸ்.இ பள்ளி.

ஆர்வலர்களுக்கான தலைப்பு : அரசுப் பள்ளிகள் இணைப்பும் அடைப்பும்.. சிறப்பிடம்: K. மோகன்ராஜ், சோமரசம்பேட்டை.

கவிதை போட்டி: கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தலைப்பு : நின்னா தேர்வு… நடந்தா தேர்வு… முதலாம் இடம்: வெ. சாந்தினி தேவி, இரண்டாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் ‘அ’ பிரிவு, பிஷப் ஹீபர் கல்லூரி. இரண்டாம் இடம்: வீ. மணிகண்டன், இளங்கலை இலக்கியம் இரண்டாம் ஆண்டு, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, முசிறி. மூன்றாம் இடம்: P. சகாதேவன், ஜடமங்கலம்..

சிறுகதை போட்டி- தலைப்பு : கல்வி… முதலாம் இடம்: வே. இலாவண்யா, பட்டதாரி ஆசிரியை (கணிதம்), அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் – முசிறி. இரண்டாம் இடம்: ச. ஜயபாரதி, இரண்டாம் ஆண்டு இளநிலை இயற்பியல் ‘அ’ பிரிவு, பிஷப் ஹீபர் கல்லூரி. மூன்றாம் இடம்: M. பார்த்திபன், பட்டதாரி ஆசிரியர், இ.ஆர் மேல்நிலைப்பள்ளி, சத்திரம்.

(குறிப்பு: பரிசளிப்பு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் )

இப்படிக்கு: சிவ வெங்கடேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் – 2019, திருச்சிராப்பள்ளி : 9443191988.

M. மணிகண்டன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

Leave a Reply

Top