You are here
Home > இயக்கச் செய்திகள் > சேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..

சேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..

19.09.2019 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் சார்பாக கல்வியாளர் பாவ்லோ பிரெய்ரே அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்றுக் கல்விக்கான அடையாள நாளை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை என்கிற நூல் அறிமுகவிழா தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது…..

இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் கவிஞர் மணிகண்டன் அவர்கள் தலைமை ஏற்றார்… எழுத்தாளர் விமர்சகர் கவிஞர் இல.பிரகாசம் அவர்கள் முன்னிலை வகித்தார்.. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் மு.முருகேசன் அவர்கள் கலந்துகொண்டார்….. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை எனும் நூலை அறிமுகம் செய்து மாற்றத்திற்கான கல்விமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு புதிதாக ஆசிரிய பெருமக்கள் வருகை புரிந்தார்கள்..

குறிப்பாக ஆரகலூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த குமுதினி ஆசிரியை அவர்களும் சாந்தி ஆசிரியர் அவர்களும்… மேலும் இலுப்பநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் புகழேந்தி அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபெருமை சேர்த்தனர் …… அதோடு இன்னும் பல நம் தோழர்கள் கலந்துகொண்டு இந் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் தலைவர் ஆசிரியர் சத்தியமூர்த்தி அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தலைவாசல் கிளையை சேர்ந்த ஆசிரியர் மாயக் கண்ணன் அவர்கள் நன்றி கூற விழா இனிதாக நிறைவுற்றது…

Leave a Reply

Top