You are here
Home > அறிவிப்புகள் > செப்டம்பர் 19 : பாவ்லோ பிரைரே பிறந்த நாளை மாற்றுக் கல்விக்கான அடையாள தினமாக அறிவியல் இயக்கம் அனுசரிப்பு..

செப்டம்பர் 19 : பாவ்லோ பிரைரே பிறந்த நாளை மாற்றுக் கல்விக்கான அடையாள தினமாக அறிவியல் இயக்கம் அனுசரிப்பு..

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என கற்பித்த கல்வியாளர் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் செப்டம்பர் 19 ஐ மாற்றுக் கல்விக்கான விவாத நாளாக… கல்வி விழாவாக.. கருத்தரங்காக… கலந்துரையாடலாக… இக்காலச் சூழலுக்கு ஏற்றவாறு , கல்வியை சீரழிவிலிருந்து பாதுகாக்க, எல்லார்க்கும் கல்வி எளிதாய் கிடைத்திட, கல்வி மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்ட செயல்பாட்டாளர்களை மேலும் மேலும் செழுமையூட்டும் விதத்தில் பயன்படுத்துவோம்..

பாவ்லோ பிரைரே பிறந்த நாள், மாற்றுக் கல்விக் கொள்கையினை முன்வைத்தல், மாற்றுக் கல்விக்கான மாதாந்திர சந்திப்பை தொடங்குதல் ஆகிய மூன்று அம்சங்களைக் கவனத்தில் கொண்டு  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  அனைத்து மாவட்டக் கிளைகளும் ஒன்றிய, கிராமக் கிளைகளும்  நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்திட மாநில கல்வி உப குழு சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம் – தமிழில்..

ஆங்கிலத்தில்…

பாவ்லோ பிரையரும் அறிவொளி இயக்கமும்..

கல்வி என்றும் நடுநிலையானதல்ல…

முனைவர். அ.கலைநேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர் (செப்டம்பர் 19)
கல்வி உபகுழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9884237678

Leave a Reply

Top