You are here
Home > இயக்கச் செய்திகள் > புத்தகங்களுடன் தேநீர் விருந்து

புத்தகங்களுடன் தேநீர் விருந்து

செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் ஆசிரியர்கள் மத்தியில் கல்விசார்ந்த நூல்களை அறிமுகப்படுத்தும் பொருட்டும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் பொருட்டும் மாநிலம் முழுவதும் புத்தகங்களுடன் தேநீர் விருந்து என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கம்பம் கிளையின் சார்பில் செப்.5 அன்று மாலை ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாநிலச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். பங்கேற்ற ஆசிரியர்கள் அவர்கள் வாசித்த நூல்களை அறிமுகப்படுத்திப் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். கிளைச் செயலாளர் சுரேஷ் கண்ணன் ஒருங்கிணைத்தார்.

அதே நாள் தேனி முல்லை நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேனி கிளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு தேனி கிளைத் தலைவர் தாழைக்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், இணைச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளைச் செயலாளர் ராம்குமார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

செப்.6 அன்று மாலை உத்தமபாளையம் கிளை சார்பில் ஞானம்மன்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளைத்தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். கிளைப் பொருளாளர் சத்யா வரவேற்றார். மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் அருணா நன்றி கூறினார். அக்.5 சர்வதேச ஆசிரியர் தினத்தை கிளையின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில்   காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், காளையார் கோவில் ஆகிய இடங்களில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. காரைக்குடிக்கு அருகில் உள்ள கோவிலூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து 5.9.19 ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் ஜீவானந்தம். ராஜு ஆகியோர் உரையாற்றினார்கள். சிவகங்கை  சாய் பால மந்திர் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலர் சாஸ்தா சுந்தரம் தலைமை தாங்கினார். சிவகங்கை கிளை செயலர்  பிராபகரன் ஆயிஷா கதை புத்தகம்  பற்றி கூறினார். மாவட்ட. பொருளார் ஆரோக்கிய மேரி கனவு ஆசிரியர், இருட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் போன்ற நூல்கள் பற்றி கூறினார்.  பங்கு கொண்ட ஆசிரியர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. முடிவில் தலைமை ஆசிரியை கோமதி பாலா நன்றி கூறினார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

கன்னியாகுமரியில் மாவட்டச் செயலாளர் பணிபுரியும் பள்ளியில்  உள்ள ஆசிரியர்களுக்காக நாகர்கோவில் பாரதி புத்தகாலயத்தில் கல்வி சார்ந்த நூல்கள் (₹10,000 மதிப்பிலானது) வாங்கப்பட்டது. அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசிரியர்தின கலந்துரையாடலில் 15 பேர் கலந்து கொண்டனர். கல்வி, ஆசிரியர் , மாணவர் சார்ந்து உரையாடல் அமைந்தது. பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து நண்பர்கள் பேசினர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஓசுர் ஒன்றிய கிளை சார்பில் பரிமளம் பள்ளியிலும் ஓசுர் மாநகராட்சி நூலகத்திலும் புத்தகங்களுடன் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்தூர் ஒன்றியம் சார்பில் ஆசிரியர்களுடன் ஒரு தேனீர் விருந்து, சிகரம் தொடும் ஆசிரியர்கள், பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் பாலம் புத்தக மையத்துடன் இணைந்து ஆசிரியர் தின நிகழ்வு நடைபெற்றது. தாரமங்கலம் அறிவியல் இயக்க கிளை சார்பில் நைஸ் கிட்ஸ் காலேஜில் புத்தகங்களுடன் தேநீர் கொண்டாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து மாவட்ட மைய நூலகத்தில் நடத்திய நிகழ்வில் திரு.கூத்தப்பாடி மா.பழனி  -கல்வியில் வேண்டும் புரட்சி, திரு.சம்பத் -இது யாருடைய வகுப்பறை, திரு.பூவிதழ் உமேஷ்- போயிட்டு வாங்க சார்.. ஆகியோர் மேற்கண்ட நூல்கள் பற்றி கலந்துரையாடினர்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலம் ஜான் டி பிரிட்டோ ஆசிரியர் பயிற்சி கல்லூரி இணைந்து நடத்திய புத்தகங்களுடன் ஆசிரியர் தேநீர் விருந்து கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர் முனைவர். வெ. சுகுமாரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் முனைவர் இரா. தமிழடியான், வாழ்த்துரை. அருட்தந்தை ஸ்டீபன்ராஜ், முதல்வர். முனைவர். மேரி கரோலின், ஜான் டி பிரிட்டோ ஆசிரியர் பயிற்சி கல்லூரி. இறுதியாக திரு. ராஜசேகர் மாவட்ட இணைச் செயலாளர் நன்றி கூறினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிட்ட இடங்களிலும் மிகச்சிறப்பாக ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

கரூர் மாவட்டத்தில் காந்தி கிராமம் ஊ. ஓ. நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் சார்பில் 25 வருடம் சிறந்த முறையில் ஆசிரியர் பணி செய்த தலைமை ஆசிரியர் அவர்களை வாழ்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் செப் 5 ஆசிரியர் தினம் வாசிக்கும் ஆசிரியரே வாகை சூடும் ஆசிரியர் எனும் தலைப்பில்  இனிதே நடைபெற்றது. 40 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திருமதி.பு.பரமேஸ்வரி தலைமை தாங்கினார், பாரதி புத்தகாலைய மாவட்ட பொறுப்பாளர் திரு. காந்தி அவர்கள் வரவேற்புரையுடன், நூல் அறிமுகமும் செய்திட  புத்தகம் பற்றிய மதிப்புரை திரு. முத்துக்குமார் (Tnsf மாவட்ட இணைசெயலாளர்) திரு. செல்மா பிரியதர்சன் (மாவட்ட தலைவர்  உயர்நிலை,மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்), திரு.பாபு (Tnptf மாவட்ட பொறுப்பாளர்) , திரு. கெளதமன் (Tnsf மாவட்ட பொருளாளர்),  அரசுழியர் சங்க மாவட்ட தலைவர் திரு.விஜயகுமார் நன்றி கூறினார்.

உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் VNK கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் TNSF மாநில பொது செயலாளர் திருமிகு சுப்பிரமணி கலந்து கொண்டார். ஹோலி ஏஞ்சல் ஆசிரியர் பயிற்சி  கல்லூரியில் ஆசிரியர் தினம் மற்றும் உலக எழுத்தறிவு தினம் கருத்தரங்கத்தில் TNSF.. பொது செயலாளர் திருமிகு சுப்பிரமணி அவர்கள்  கலந்து கொண்டார். காட்டூர் கிளையின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின பெற்றோர்கள் கூட்ட நிகழ்வு நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஆசிரியர் தின கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 3.00 மணி அளவில் புத்தகங்களோடு தேநீர் கொண்டாட்டம் நிகழ்ச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளிரியல் துறை இயக்குநர் மற்றும் துறைத் தலைவருமான பேரா.மணிமேகலை அவர்களது தலைமையில் நடைபெற்றது. மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் அவர்கள் துவக்கவுரை ஆற்றினார். திருச்சி மாநகர வட்டார அலுவலர் ஜெயந்தி அவர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மேனாள் மாவட்டச் செயலாளர் நடராசன்,  மாவட்டச் செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் மனோகர், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்தி, புத்தகங்களை அறிமுகப்படுத்தி இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். ஆசியர்களின் அனுபவ பகிர்வும் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியர் ஆசா தேவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் 35க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவர்கள் கிளையின் சார்பாக ஜமால் முகமது  ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வருங்கால ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உண்டாகும் விதமாக நிகழ்வுகள் நடைபெற்றன. ஓரிகாமி, எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. அறிவியல் இயக்கத்தை பற்றிய அறிமுகமும், துளிர், விஞ்ஞான சிறகு மற்றும் NCSC பற்றியும் விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து ,கல்லூரி மாணவர்கள் கிளை நிர்வாகிகள் S. முகமது யாசர், அசன் முகமது ரியாஜ், முகமது இதுரிஸ், சூர்ய ஜெய கிருஷ்ணா, சுகுமாரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும்,  10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொது செயலாளர் S.சுப்பிரமணி அவர்களிடம்  திருவள்ளூர் மாவட்டம் சார்பில் 500 விழுது சந்தாக்களும், வட சென்னை மாவட்டம் சார்பில் 50  விழுது சந்தாக்களும் கொடுக்கப்பட்டது என்பது மிகச்சிறப்பான அம்சம். பாராட்டிற்குரியது.

தொகுப்பு : தேனி சுந்தர்

Leave a Reply

Top