You are here
Home > இயக்கச் செய்திகள் > ஒன்றிய வினாடி- – வினா போட்டி: ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

ஒன்றிய வினாடி- – வினா போட்டி: ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

கோத்தகிரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நடத்தப்படும் வினாடி–வினா போட்டி, துவங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட செயலாளர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநில அளவிலான வினாடி–வினா போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஒன்றிய அளவிலான போட்டிகள் கோத்தகிரியில், நேற்று துவங்கியது.

இந்த போட்டி, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளியில், 24ம் தேதி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 31ம் தேதி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 3ம் தேதியிலும் நடக்கிறது. இந்த ஆண்டு, 3 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.6ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிகளில் தனித்தனியே போட்டி நடைபெறுகிறது.

மேலும், அறிவியல் இயக்கம் சார்பில், திறனறிதல் தேர்வு எழுதும் போட்டியும் நவ., 2ம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில், 27 ஆண்டுகளாக நடத்தப்படும் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் போட்டியும் நவம்பரில் நடக்கிறது.இந்த போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 94433 17439 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Top