You are here
Home > NCSC > தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல பயிற்சி முகாம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான மண்டல பயிற்சி முகாம் நடந்தது. இந்திய அறிவியல் தொழில்நுட்ப குழுவினரால், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடக்கிறது. இதில், 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான மண்டலப் பயிற்சி முகாம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாநாட்டுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் காத்தவராயன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் தியாகராஜன் பயிற்சி நோக்கம் குறித்து, அதன் நிர்வாகிகளுடன் விளக்கிப் பேசினார். இதில், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top