You are here
Home > அறிவிப்புகள் > ஆக.9 அறிவியலுக்காக அணிவகுப்போம்

ஆக.9 அறிவியலுக்காக அணிவகுப்போம்

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்.
வழக்கம் போல இந்த ஆண்டும் March For Science நிகழ்ச்சி விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து நாளை, 09.08.19 ( நாகசாகி தினத்தன்று ) மாலை 4.00 மணியளவில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடக்க இருக்கிறது.
IMG-20190808-WA0016
நாளை நமது அறிவியல் இயக்கத்தின் 20வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளதால், சென்னை வர இயலாத சூழலில் உள்ளோம்.
எனவே சென்னையில் உள்ள நண்பர்கள், இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்புற நடத்தி தர வேண்டுகிறோம். மேலும் நாடு இன்றிருக்கும் சிக்கலான நேரத்தில் அறிவியலுக்காக அணிவகுப்பதும் கூடுவதும், அதற்காக செயலாற்றுவதும் காலத்தின் கட்டாயம். எனவே வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும்  அறிவியலுக்கான பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்…
என்றும் அன்புடன் மோகனா
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Leave a Reply

Top