You are here
Home > இயக்கச் செய்திகள் > புரிந்து படித்தால் நீங்களும் விஞ்ஞானியே!’ அறிவியல் கண்காட்சியில் தெளிவான விளக்கம்

புரிந்து படித்தால் நீங்களும் விஞ்ஞானியே!’ அறிவியல் கண்காட்சியில் தெளிவான விளக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அறிவியல் கண்காட்சி மற்றும் விஞ்ஞானிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 20வது மாநிலமாநாட்டை முன்னிட்டு, ‘விஞ்ஞானிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியை பள்ளி மாணவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏ.வி.பி., கல்வி நிறுவன தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.மத்திய அறிவியல் கருவிகள் மையத்தின் மூத்த விஞ்ஞானி ஐயப்பன் பேசுகையில், ”எதையும் கஷ்டப்பட்டு செய்ய கூடாது. இஷ்டப்பட்டு செய்யும் போதுதான் சாதிக்க முடியும். முதல் மதிப்பெண் வாங்க வேண்டுமென மனப்பாடம் செய்வதை விட, அறிவியலை புரிந்து படித்து, 70 சதவீத மதிப்பெண் எடுப்பதே சிறந்தது. மனப்பாடம் செய்தால் மார்க் மட்டுமே வரும். புரிந்து படித்தால் நீங்களும் விஞ்ஞானியாகலாம். ‘எழுமின் விழுமின் குறிசாரும் வரை நில்லாது செல்மின்’ எனும் விவேகானந்தரின் வாக்கை கடைபிடியுங்கள்,”என்றார்.மாணவர்களின் அறிவியல் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் விதமாக, அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அறிவியல் மையத்திலிருந்து சிறப்பு பஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. இதில் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், மாதிரிகள் இடம் பெற்றிருந்தன. வரும் 10ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை அனைவரும் பங்கேற்று பயனடையலாம்.

‘பாடத்திட்ட மாதிரிகள்’அறிவியல் இயக்க வரவேற்பு குழு தலைவர் ராஜகோபால் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையம், சென்னை பெரியார் அறிவியல் மையம், கோவை மண்டல அறிவியல் மையம், வேளாண் பல்கலை ஆராய்ச்சி மையம் என, 10க்கும் மேற்பட்ட அறிவியல் மையங்களிலிருந்தும், விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.பிளஸ்1, பிளஸ் 2 புதிய பாடத்தில் உள்ள அறிவியல் மாதிரிகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதால், அரசு பள்ளி மாணவருக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசு பள்ளிகள் அணுகினால், உரிய பஸ் வசதி செய்ய தயாராக உள்ளோம். அறிவியல் ஆராய்ச்சி புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினர்.

தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top