You are here
Home > அறிவியல் கல்வி > காமிரா எவ்வாறு உருவங்களை பதியவைக்கிறது?

காமிரா எவ்வாறு உருவங்களை பதியவைக்கிறது?

காமிரா எனும் படபிடிப்பு கருவியில் குவிலென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். பொருளிலிருந்து சிதறடிக்கப்படும் ஒளிக்கதிர்கள் காமிராவின் லென்ஸை ஊடுருவி பொருளின் தலைகீழான பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. முந்தைய பிலிம் காமிராக்களில் பிம்பங்களை பதிவு செய்ய படச்சுருள் வைக்கப்பட்டிருக்கும். இன்றைய டிஜிடல் காமிராக்களில் படச்சுருளுக்கு பதிலாக லட்சக்கணக்கான புள்ளிகளைக் (pixels) கொண்ட ஒளியுணர் சிப் வைக்கப்பட்டிருக்கும்.

காமிரா லென்ஸிலிருந்து பொருள் இருக்கும் தொலைவிற்கேற்ப பிம்பம் விழும் இடமும் மாறுபடும். படச்சுருள் அல்லது ஒளியுணர் சிப்பின் மீது பிம்பத்தை உருவாக்கும் பொருட்டு லென்ஸை முன்னும் பின்னும் நகர்த்துகிறோம். பொருளின் பிரகாசத்திற்கு ஏற்ப காமிராவில் நுழையும் ஒளியின் அளவை கட்டுப்படுத்துகிறோம்.

படச்சுருளை இருட்டறையில் வேதிக்கரைசலில் கழுவி பிம்பத்தின் பிரதியை பொறுகிறோம். அல்லது ஒளியுணர் சிப் மீது படிந்த பிம்பத்தை காமிரா படமாக மாற்றி திரையில் காண்பிக்கிறது.

Leave a Reply

Top