You are here
Home > அறிவியல் கல்வி > யுரேகா யுரேகா 04: எக்ஸ்ரேக்கும் ஸ்கேனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

யுரேகா யுரேகா 04: எக்ஸ்ரேக்கும் ஸ்கேனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எக்ஸ்ரே, ஸ்கேன் இரண்டுமே மருத்துவத் துறையில் சாதனை புரிந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளாக்கும். ராண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ்ரே நம் உடலில் உள்ள எலும்புகளின் நிலை பற்றியும், நுறையீரல், இதயம், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம், கருவில் வளரும் சிசுவின் நிலை போன்றவற்றின் மேலோட்டமான நிலை பற்றியும், முன்பின் அல்லது பக்கவாட்டு பிம்பமாகவோ படம் பிடித்துக்காட்டும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் எக்ஸ்ரேயினால் புலனறிய முடியவில்லை. ஆனால் ’ஹௌன்ஸ்பீல்ட்’ கண்டுபிடித்த சி.டி.ஸ்கேனர் உடலில் உள்ள எந்த மூலையில் எந்த மாறுபாடு இருந்தாலும் கண்டறிந்து விடலாம். இதைத் தவிர எக்ஸ்ரேயில் படம் எடுத்தப் பிறகு அதற்கென உரிய முறையில் உரிய கரைசலில் கழுவிய பிறகே படம் நமக்குத் தெரியும். ஆனால் ஸ்கேனில் இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறித் திரையில் உடல் உறுப்பின் பிம்பத்தை படத்தை உடனுக்குடன் நாம் பார்த்து அறியலாம். ஸ்கேனுக்கு செலவு அதிகம் ஆகும்.

Leave a Reply

Top