You are here
Home > அறிவியல் கல்வி > யுரேகா யுரேகா 03: முகம் பார்க்கும் கண்ணாடியில் பூசப்படும் ரசம் எக்கலவையினால் ஆனது?

யுரேகா யுரேகா 03: முகம் பார்க்கும் கண்ணாடியில் பூசப்படும் ரசம் எக்கலவையினால் ஆனது?

பண்டைய காலத்தில் ஆடிகள் தயாரிக்கப்பட்டபோது பாதரசத்தைக் கண்ணாடி மேல் படியச்செய்யும் தொழில்நுட்பம் இருந்தது. அதிலிருந்துதான் ’ரசம் பூசுதல்’ என்ற பெயர் தோன்றியது. இக்காலத்தில் வெள்ளி நைட்ரேட்டை சில வேதிப்பொருட்களின் உதவியால் (பார்மால்டிஹைடு, சோடியம் பொட்டாசியம் டார்ட்ரேட்) ஒடுக்கம் செய்தால் வெள்ளி பிரிந்து கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளும். அது உதிராமல் இருக்க அதன் மீது சிவப்பு நிற காரீய ஆக்ஸைடைப் பூசி விடுகின்றனர். இதைத்தவிர அலுமினியம், வெள்ளீயம் போன்றவற்றை ஆவியாக்கி படிய வைத்தும் ஆடிகள் தயாரிக்கப்படுகின்றன. சில சிறப்பு மிக்க ஆடிகளில் தங்க ஆவியும் படிய வைக்கப்படுகின்றன.

Leave a Reply

Top