You are here
Home > அறிவியல் கல்வி > யுரேகா யுரேகா 02: குளத்தில் விட்டெறியும் கல் வட்ட அலைகளை ஏற்படுத்துவதேன்?

யுரேகா யுரேகா 02: குளத்தில் விட்டெறியும் கல் வட்ட அலைகளை ஏற்படுத்துவதேன்?

சலனமில்லாமல் நீர்ப்பரப்பின் மீது கல்லை விட்டெறியும்போது, கல் விழுந்த இடத்தில் நீர் இடம் பெயர்ந்து குழிவு ஏற்படுகிறது. குழியும் நீர்ப்பரப்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது வேகம் காரணமாக மேற்பரப்பும் குவிகிறது. இந்த நீர்ப்பரப்பும் நிலையானது அல்ல. அது மீண்டும் கிடைமட்டத்திற்கு வந்து வேகம் காரணமாக இரண்டாவது முறை குழிகிறது. இப்போக்கு பல முறை தொடர்கிறது. இதனால் கல் விழுந்த இடத்தில் தொடர்ந்து நீர்ப்பரப்பு மேலும் கீழும் அலைகிறது. இந்த அலைவு காரணமாக சலனமற்று கிடந்த நீர்ப்பரப்பில் அலைகள் வட்ட வடிவமாகப் பரவுகின்றன.

Leave a Reply

Top