You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூர்: வல்லுநர் சந்திப்பு

திருப்பூர்: வல்லுநர் சந்திப்பு

IMG-20190731-WA0043

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (31-7-19) நடத்தப்பட்டது

IMG-20190731-WA0042

திரு.காத்தவராயன், அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் அவர்களின் எளிய அறிவியல் பரிசோதனைகள் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவன்மலை மற்றும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதுபாளையம் பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒலி உருவாதல், விசை, உராய்வு, பரப்பு இழுவிசை, மைய விலக்கு விசை, ஓலி ஊடுருவல், அழுத்தம் போன்ற அடிப்படை சார்ந்த சோதனைகள் எளிய செய்முறை வடிவில் செய்யப்பட்டு விளக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.

#TNSFTirupurdistrict
#TNSFStatecongress2019
#ScienceForPeople
#TirupurThinks

Leave a Reply

Top